»   »  ரஜினியின் 2.ஓ - பிரமாண்ட மேக்கிங் வீடியோ!

ரஜினியின் 2.ஓ - பிரமாண்ட மேக்கிங் வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் '2.O' படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில் அந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார்.

இதில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரமாண்டமான படம் :

பிரமாண்டமான படம் :

ரூபாய் 400 கோடி செலவில் தற்போது உருவாகி வருகிறது ‘2.O'. படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் அதிக பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

2.ஓ ஃபீவர் :

2.ஓ ஃபீவர் :

இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி, எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தன. எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத அளவுக்கு பயங்கரமாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு '2.O' போஸ்டரோடு ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எப்போ ரிலீஸ்? :

எப்போ ரிலீஸ்? :

இதனிடையே, இந்தப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு வெளியிட, படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கிராபிக்ஸ் பணி காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

மேக்கிங் வீடியோ :

இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 1.47 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் படம் உருவான விதம் பற்றிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் ஆகியோருக்கு மேக்கம் போடப்படுவது, மாதிரி ரோபோ உருவாக்கம், சண்டைக் காட்சிகள், கிராஃபிக்ஸ் உருவாக்கக் காட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சிட்டி இஸ் பேக் :

வெளியாகியிருக்கும் மேக்கிங் வீடியோவின் மூலம் படக்குழுவின் பிரமாண்டமான உழைப்பு தெரிகிறது. ரஜினி ரசிகர்கள் #2pointO #ChittiIsBack எனும் ஹேஸ்டேக்குகளின் வழியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

English summary
Director shankar released making video of '2.O'. Rajinikanth, Akshay kumar, Amy jackson are played lead roles in this movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil