»   »  இயக்குநர் சீனு ராமசாமிக்கு மக்கள் இயக்குநர் விருது

இயக்குநர் சீனு ராமசாமிக்கு மக்கள் இயக்குநர் விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் சீனு ராமசாமிக்கு மக்கள் இயக்குநர் என்ற விருதினை வழங்கி உள்ளது மதுரை கல்லூரி.

125 வருடம் பாரம்பரியம் மிக்கது மதுரைக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் நேற்று நடந்த விழாவில் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமிக்கு பாராட்டும் விருதும் அளித்தனர் கல்லூரியின் முதல்வர் முரளி மற்றும் பேராசிரியர்கள்.

மேடையில், "சாதாரணர்களின் வாழ்வியலை எதார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் தன்னுடைய திரைப்படங்களில் பதிவு செய்தவர்.

Makkal Iyakkunar award for Seenu Ramasamy

கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல் ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ்த் திரை உலகிற்கு மதிப்பு கூட்டிய சீனு ராமசாமிக்கு அவர்களுக்கு மக்கள் இயக்குனர் என்னும் விருதை வழங்குவதில் மதுரைக்கல்லூரி பண்பாட்டுக்கழகம் பெருமை கொள்கிறது," என்ற விருது பட்டயம் வாசிக்கப்பட்டது.

ஏற்புரையில் இயக்குனர் சீனு ராமசாமி, "வாழும் காலத்தில் பட்டப்பெயர்களை அடைமொழிகளை உடுத்திக் கொண்டு வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு மனிதனின் மறைவிற்கு பிறகு அவன் இந்த சமூகத்திற்கு பயன்பட்ட விதத்தில் மக்கள் தரும் பட்டப் பெயர்களே நிரந்தரமானவை.

ஆயினும் மதுரையில் மதிப்புமிக்க மதுரைக் கல்லூரியின் கல்விக் குழுமம் வழங்கும் இவ்விருதினை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். மேலும் இவ்விருதைப் பெறும் இச்சந்தர்பத்தில் பொறுப்புணர்சியும் கூடுகிறது," என்றார்.

இவ்விழாவில் கல்லூரியின் 2000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

English summary
Madura College of Madurai honoured Director Seenu Ramasamy with Makkal Iyakkunar award.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil