»   »  காஸ்ட்லி விவாகரத்து: வாரிசு நடிகரை பிரிந்த நடிகைக்கு ரூ. 15 கோடி ஜீவனாம்சம்

காஸ்ட்லி விவாகரத்து: வாரிசு நடிகரை பிரிந்த நடிகைக்கு ரூ. 15 கோடி ஜீவனாம்சம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சல்மான் கானின் தம்பி அர்பாஸை கானை பிரிந்த அவரின் மனைவி மலாய்க்கா அரோராவுக்கு ரூ. 15 கோடி ஜீவனாம்சம் கிடைத்துள்ளதாம்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானும், அவரது மனைவியும், நடிகையுமான மலாய்க்கா அரோராவும் விவாகரத்து கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.


இந்நிலையில் கடந்த 11ம் தேதி அவர்களுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.


ரூ. 15 கோடி

ரூ. 15 கோடி

மலாய்க்கா அரோராவுக்கு அர்பாஸ் கான் தரப்பில் இருந்து ரூ. 15 கோடி ஜீவனாம்சம் அளிக்கப்பட்டுள்ளதாம். மலாய்க்காவுடன் தான் அவரின் மகன் அர்ஹான் தங்கியுள்ளார். ஆனால் அர்பாஸ் தனது மகனை எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்க அனுமதித்துள்ளார் மலாய்க்கா.


மலாய்க்கா

மலாய்க்கா

தனக்கும், மகனுக்கும் ரூ. 10 கோடியாவது தர வேண்டும் என்று மலாய்க்கா கேட்ட நிலையில் ரூ. 15 கோடி கிடைத்துள்ளது. ரொம்ப காஸ்ட்லி விவாகரத்து என்கிறது பாலிவுட்.


அர்பாஸ் கான்

அர்பாஸ் கான்

மலாய்க்காவும், அர்பாஸும் 18 ஆண்டு கால திருமண உறவை முறித்துக் கொண்டுள்ளனர். மலாய்க்காவுக்கு தனது கணவர் அவர் அண்ணன் சல்மான் கானின் நிழலில் வாழ்வது பிடிக்கவில்லையாம்.


சல்மான் கான்

சல்மான் கான்

சல்மான் கானுக்கு மலாய்க்காவின் நடை உடை மற்றும் நட்பு வட்டாரத்தை சுத்தமாக பிடிக்கவில்லையாம். விவாகரத்திற்கு பிறகு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற மலாய்க்கா தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் மலாய்க்கா அரோரா கான் என்று எழுதியிருந்ததை பார்த்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து கானை நீக்குமாறு கூறியுள்ளார்.


English summary
Bollywood actress Malaika Arora has reportedly got Rs. 15 crore as alimony from her former husband Arbaz Khan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos