அர்ஜுன் கபூரை பார்த்ததும் கட்டியணைத்த மலைக்கா அரோரா.. எக்ஸ் காதலர்கள் இவ்ளோ க்ளோஸ் ஆகிட்டாங்களே!
மும்பை: ஆஸ்கருக்கு தேர்வாகியுள்ள "ஹோம்பவுண்ட்" திரைப்படத்தின் பிரீமியர் காட்சி மும்பையில் நேற்று இரவு நடைபெற்றது. அப்போது, முன்னாள் காதலர்களான அர்ஜுன் கபூர் மற்றும் மலைக்கா அரோரா சந்தித்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரிவுக்குப் பிறகும் இருவரும் இணக்கமாகப் பழகிய விதம் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு தங்கள் பிரிவை அர்ஜுன் கபூர் உறுதிப்படுத்திய நிலையில், இந்த சந்திப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. பிரீமியர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த இஷான் கட்டர், ஜான்வி கபூர், விஷால் ஜெத்வா போன்ற நடிகர்களுடன், தனது சகோதரிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அர்ஜுன் கபூரும் கலந்துகொண்டார். மலைக்காவும் இந்த நட்சத்திரங்கள் நிறைந்த பிரீமியரில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியின் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானாலும், அர்ஜுன் மற்றும் மலைக்கா மீண்டும் சந்தித்த வீடியோவே அதிக கவனம் பெற்றது. வீடியோவில், அர்ஜுன் கபூர் நேஹா தூபியா போன்ற சக நடிகர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, சிவப்பு கம்பளத்தில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பிறகு, மலைக்கா அர்ஜுனிடம் வந்து அவரை அன்புடன் கட்டி அணைத்துக்கொண்டார். இருவரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, "ஹோம்பவுண்ட்" திரைப்படத்தின் இயக்குநர் நீரஜ் கய்வான், அர்ஜுன் மற்றும் மலைக்காவைச் சந்தித்துப் பேசினார்.
இந்த மூவரும் பின்னர் பேசிக்கொண்டிருந்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது. பிரிவுக்குப் பிறகு, அவர்கள் ஒன்றாகக் காணப்பட்ட அரிய பொது நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. சமூக வலைத்தளப் பயனர்கள் இந்த முன்னாள் ஜோடி இன்னும் நல்லுறவைப் பேணுவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
ஒரு நெட்டிசன், "முன்னாள் காதலர்களைச் சந்திப்பது எப்போதும் சங்கடமானது. ஆனால் அவர்கள் பரவாயில்லை எனத் தோன்றியது" என்று பதிவிட்டார். மற்றொருவர், "வார்த்தைகளை விட சத்தமாகப் பேசும் அணைப்பு - மலைக்கா அரோரா & அர்ஜுன் கபூர் அணைப்பு" என்று குறிப்பிட்டார்.
"அவர் ஒரு முன்னாள் காதலராக இருந்தாலும் நல்ல நண்பராக இருக்க முடியும்! அர்ஜுனுடன் ஆரோக்கியமான நட்பைப் பேணுவதை மலைக்கா அரோரா நிரூபித்துள்ளார்" என மற்றொருவர் பதிவிட்டிருந்தார்.
மலைக்கா மற்றும் அர்ஜுன் 2018ல் டேட்டிங் செய்யத் தொடங்கினர். ஆரம்பத்தில், இருவரும் தங்கள் உறவைப் பற்றி அதிகம் பேசவில்லை. இருப்பினும், விடுமுறைப் பயணங்களில் எடுத்த காதல் புகைப்படங்களை இருவரும் தொடர்ந்து பகிர்ந்து கொண்டனர். மேலும், ஒருவருக்கொருவர் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். மகன் வயது இளைஞருடன் 20 வயதுக்கும் மேற்பட்ட மகனை வைத்திருக்கும் நடிகை காதலிப்பது குறித்து ஏகப்பட்ட கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பலமுறை இருவரும் பிரேக்கப் செய்து விடுவார்கள் என்றும் அர்ஜுன் கபூர் ஜாலிக்காக பழகுகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன.
கடைசியில், கடந்த ஆண்டு அக்டோபரில், அர்ஜுன் தனது உறவு நிலை குறித்து மௌனம் கலைத்தார். மும்பையில் நடந்த ஒரு நிகழ்வில், கூட்டத்தினர் மலைக்காவின் பெயரை மீண்டும் மீண்டும் கூச்சலிட்டபோது, அர்ஜுன், "இல்லை, நான் இப்போதைக்கு சிங்கிள். ரிலாக்ஸ் செய்யுங்கள்" என்றார்.
அர்ஜுனின் இந்த "நான் சிங்கிள்" என்ற கருத்து குறித்து மலைக்கா பின்னர் ETimes க்கு அளித்த பேட்டியில், "நான் மிகவும் தனிப்பட்ட நபர், என் வாழ்க்கையின் சில விஷயங்கள் பற்றி நான் விரிவாகப் பேச விரும்பவில்லை."
"எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேச பொது மேடையை நான் ஒருபோதும் தேர்வு செய்ய மாட்டேன். எனவே, அர்ஜுன் கூறியது அவருடைய தனிப்பட்ட விருப்பம். நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், ஆம், பல காரணங்களுக்காக இது ஒரு கடினமான ஆண்டாக இருந்தது" என்று கூறினார்.
மீண்டும் இருவரும் ஒரு பொதுவிழாவில் பங்கேற்ற போது அன்பாகவும் நட்பாகவும் பழகியது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதே கோலிவுட்டில் என்றால் நடக்கிற கதையே வேறு என ட்ரோல்களும் பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











