முன்னாள் கணவரை பார்த்ததும் மூடு மாறிடுச்சு போல.. இப்படி கட்டித் தழுவுறாரே அர்ஜுன் கபூர் காதலி!
மும்பை: கணவர் அர்பாஸ் கான் உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வரும் நடிகை மலைகா அரோரா துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும் பாலிவுட் நடிகருமான அர்ஜுன் கபூரை காதலித்து லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், மலைகா அரோரா மற்றும் அவரது முன்னாள் கணவர் அர்பாஸ் கான் இருவரும் மகன் அர்ஹான் கானை விமான நிலையத்திற்கு சென்று வழியனுப்பினர்.
அப்போது இருவரும் பரஸ்பரம் கட்டித் தழுவிக் கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றன.

பாலிவுட் குத்தாட்ட நடிகை
உயிரே படத்தில் தக்க தைய்யா பாடலுக்கு ஷாருக்கான் உடன் இணைந்து ரயிலில் குத்தாட்டம் போட்ட நடிகை மலைகா அரோரா பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையாக இத்தனை காலமும் வலம் வருகிறார். இப்போது கூட அவர் வெளியிடும் ஹாட் போட்டோக்கள் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்து விடுகின்றன.

போனி கபூர் மகனுடன் காதல்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் மலைகா அரோராவைத் தான் தற்போது காதலித்து லிவிங் டுகெதர் வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்நிலையில், முன்னாள் கணவரை மலைகா அரோரா சந்தித்த தருணங்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன.

முன்னாள் கணவரை கட்டித்தழுவி
நடிகை மலைகா அரோரா பாலிவுட் நடிகர் அர்பாஸ் கானை கடந்த 1998ம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், அவருடன் காதல் மனைவியாக பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தனர். இருவருக்கும் 20 வயதில் அர்ஹான் கான் என்கிற மகன் ஒருவர் உள்ளார்.

20 வயதில் மகன்
இளம் நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வரும் நடிகை மலைகா அரோராவுக்கு 20 வயதில் அர்ஹான் கான் எனும் மகன் உள்ளார். மேல் படிப்புக்காக அர்ஹான் கான் அமெரிக்கா செல்லும் நிலையில், அவரை வழி அனுப்ப மலைகா அரோரா மற்றும் அவரது முன்னாள் கணவர் அர்பாஸ் கான் இருவரும் விமான நிலையத்திற்கு வந்த போது தான் இந்த சந்திப்பும் ஹக்கும் நடைபெற்றது.

இதுதான் மெச்சூரிட்டி
அர்பாஸ் கான் மற்றும் மலைகா அரோரா இருவரும் தங்கள் மகன் அர்ஹான் கானை வழியனுப்பிய நிலையில், பரஸ்பரம் கட்டித் தழுவிக் கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியான நிலையில், அதை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் இதுதான் மெச்சூரிட்டி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

அர்ஜுன் கபூர் பாவம்
மேலும், சில நெட்டிசன்கள் ஒட்டுமொத்த குடும்பமே ஒன்றாக சந்தோஷமாக இருக்கும் போது நீ ஏன் பா அதை பார்த்து அழுகிற என அர்ஜுன் கபூரை பார்த்து கேட்க, அந்த நடிகையோட இப்போதைய காதலனே நான் தான் சார் என காதலர் தின மீமை இந்தி ரசிகர்களும் போட்டு நடிகர் அர்ஜுன் கபூரை ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











