மாளவிகா மனோபாலாவுக்கு ஜோடியா?...படக்குழு தந்த விளக்கம்
சென்னை : அஜித் பட ஹீரோயினான மாளவிகா, மனோபாலாவுக்கு ஜோடியாக நடித்துள்ளதாக வந்த செய்தி குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அதோடு மனோபாலா பகிர்ந்த ஸ்டில் பற்றியும் சம்பந்தப்பட்ட படக்குழு தெளிவுபடுத்தி உள்ளது.
அஜித் நடித்த உன்னைத் தேடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மாளவிகா சர்மா. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி இருந்தார். முதல் படமே பிளாக் பஸ்டர் படமாக அமைந்ததால் தொடர்ந்து ரோஜா வனம், ஆனந்த பூங்காற்றே, வெற்றி கொடிகட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் மாளவிகா. பிறகு சினிமாவிற்கு சிறிது பிரேக் விட்ட மாளவிகா, சித்திரம் பேசுதடி படத்தில் வாழமீனுக்கும் விளங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலுக்கு அயிட்டம் சாங் ஆடி ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்.

மாளவிகா ரீஎன்ட்ரி
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய மாளவிகாவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் மாளவிகா. சமீபத்தில் நடிகர் மனோபாலா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாளவிகா, ஜீவா ஆகியோருடன் இருக்கும் போட்டோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.

மனோபாலாவுக்கு ஜோடியா
ஜீவா தற்போது சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடித்து வருவதால், இந்த போட்டோ சுந்தர்.சி இயக்கும் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் மாளவிகா, மனோபாலா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் மனோபாலாவிற்கு ஜோடியாக மாளவிகா நடிப்பதாக மீடியாக்களில் செய்தி வெளியானது. இந்நிலையில் இந்த போட்டோ பற்றி படக்குழு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

படக்குழுவின் விளக்கம்
அதாவது, மனோபாலா பகிர்ந்த போட்டோ சுந்தர்.சி இயக்கும் படத்தின் ஸ்டில் இல்லையாம். டைரக்டர் பொன்குமரன் இயக்கத்தில் உருவாகும் கோல்மால் படத்தின் ஸ்டில்லாம். இந்த படத்தில் ஜீவா, மாளவிகா, மனோபாலா ஆகியோர் நடிக்கிறார்களாம். இப்படத்தில் ஜீவா வேலை செய்யும் ஆபீசில் அவருக்கு மேல் அதிகாரியாக மாளவிகா நடிக்கிறாராம். இந்த படத்தில் மனோபாலாவும் நடிக்கிறாராம்.

மாளவிகா ஜோடியில்லை
சுந்தர்.சி பிரம்மாண்ட காமெடி படம் ஒன்றை இயக்கி வருவதாக சொல்லப்பட்டதால் மனோபாலாவும் அந்த படத்தில் இணைந்துள்ளார். அவருடன் மாளவிகாவும் இணைந்து நடிக்கிறார் என்ற யூகங்கள் பரவியதாகவும், இந்த தகவல் உண்மையில்லை என்றும், மாளவிகா, மனோபாலாவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றும் படக்குழு தெளிவுபடுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











