Just In
Don't Miss!
- Lifestyle
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மறைமுகமாக ‘தளபதி 64’ அப்டேட் கொடுத்த மாளவிகா மோகனன்.. என்ன தெரியுமா?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், ரம்யா, கெளரி கிஷன், செளந்தர்யா சேத்தன், ஸ்ரீநாத், ஸ்ரீமன் என நட்சத்திர பட்டாளமே 'தளபதி 64'ல் நடித்து வருகிறது.
டெல்லியில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் கட்ட ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'தளபதி 64' படம் குறித்த அப்டேட்டை மறைமுகமாக கூறியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.
அப்போ மாநாடு இல்லையா.. வெங்கட் பிரபுவின் புதிய ட்வீட்டை பார்த்து வயிறு எரியும் சிம்பு ரசிகர்கள்?
|
ஃபிலிம்ஃபேர்
பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டு அசத்திய ஃப்லிம்ஃபேர் கிளாமர் மற்றும் ஸ்டைல் விருது விழா நேற்று இரவு மும்பையில் நடைபெற்றது. அந்த விழாவில் ‘தளபதி 64' நாயகி மாளவிகா மோகனன் கலந்து கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

என்ன அப்டேட்
டெல்லியில் நடைபெற்ற ஷூட்டிங்கில் கலந்து கொண்ட அப்டேட்களை அவ்வப்பொது தனது சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வந்த மாளவிகா மோகனன், நேற்று இரவு மும்பையில் நடந்த விருது விழாவில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம் சென்னையில் நடைபெறும் 'தளபதி 64' ஷூட்டிங் நாயகி மாளவிகா மோகனன் இல்லாமல் நடைபெற்று வருகிறது என்ற அப்டேட்டை அவர் மறைமுகமாக கூறியுள்ளார் என்பது தெளிவாகிறது.
|
செல்லக் குட்டி
'தளபதி 64' படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானதில் இருந்தே, அவரது சமூக வலைதளங்களை தளபதி ரசிகர்கள் வட்டமிட்டு வருகின்றனர். தற்போது, மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து வருகின்றனர். அதற்கும் ஒருபடி மேல் சென்று, இந்த ரசிகர், செல்லக் குட்டி எப்படி இருக்க எனக் கேட்டுள்ளார்.
|
க்யூட் டால்
உங்களின் ஒவ்வொரு போட்டோஷூட் புகைப்படங்களும் என் நெஞ்சை கொள்ளையடிக்கின்றன. நீங்க ஒரு க்யூட் டால் என இந்த ரசிகர் கொஞ்சம் ஓவராத்தான் கொஞ்சியுள்ளார். பார்த்து சார், அவங்க தளபதி ஹீரோயின்.
|
தளபதி 64 அப்டேட்
ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் கலந்து கொண்ட தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ள மாளவிகா மோகனனிடம், இந்த தீவிர விஜய் ரசிகர், தளபதி 64 அப்டேட்டை கேட்டுள்ளார்.
— தளபதி👉/€£U👈 (@Velu71189202) December 4, 2019 |
சூப்பர்
மாளவிகா மோகனனின் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு, சூப்பர் என கமென்ட் செய்துள்ளார் இன்னொரு தளபதி ரசிகர்.
|
ஹாட் குயின்
மலையாளம், இந்தி, தமிழ் என பல மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன், மாடலிங்கிலும் தொடர்ந்து கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில், அவரது இந்த ஸ்டைலிஷ் ஆன லுக்கை பார்த்த இந்த ரசிகர் ஹாட் குயின் என கிரெடிட் கொடுத்துள்ளார்.