இதுக்கு எதுக்கு டிரெஸ் போடணும்?: கலாய்த்தவர்களுக்கு பேட்ட நடிகை நெத்தியடி

By Siva

Recommended Video

Actress Malavika Mohanan: கலாய்த்த நெட்டிசனை புகைப்படத்தால் நெத்தியடி கொடுத்த மாளவிகா மோகனன்- வீடியோ

மும்பை: தன் உடையை பற்றி மோசமாக வந்த கமெண்டுகளை பார்த்த நடிகை மாளவிகா மோகனன் பதிலுக்கு நெத்தியடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் மூலம் கோலிவுட் வந்தவர் கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகனன். மும்பையில் வளர்ந்த மாளவிகா ரொம்பவே மாடர்ன் பெண்.

Malavika Mohanan shuts the trolls

இந்நிலையில் அவர் போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

அவர் அணிந்திருந்த ஷார்ட்ஸை பார்த்த நெட்டிசன்கள் இப்படியா மோசமாக உடை அணிவது என்று கேட்டனர். இந்த டிரஸ்ஸை போடுவதற்கு போடாமலேயே இருக்கலாமே என்று சிலர் கேவலமாக கலாய்த்தனர். சிலர் மலையாளத்தில் ரொம்ப அசிங்கமாக கமெண்ட் போட்டனர்.

அதை எல்லாம் பார்த்த மாளவிகா நெட்டிசன்களை மேலும் கடுப்பேற்ற மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டார்.

மரியாதைக்குரிய பெண் எப்படி உடை அணிய வேண்டும் என்று நிறைய கமெண்ட்ஸ். எனக்கு பிடித்ததை அணிந்து மரியாதையாக அமர்ந்துள்ளேன் என்று கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மாளவிகா. மாளவிகாவின் பதிலை பார்த்து பலர் பாராட்டியுள்ளனர். ஆன்லைனில் நடிகைகளுக்கு அறிவுரை வழங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X