»   »  மாளவிகாவின் "கிஸ்" புரட்சி!

மாளவிகாவின் "கிஸ்" புரட்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கிஸ் அடிப்பதில் பெரும் புரட்சியே செய்துள்ளார் மாளவிகா.

கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு மாளவிகாவை ரசிகர்களுக்கு பிடித்துப் போனாலும் சினிமாக்காரர்கள் என்னவோகண்டுகொள்ளவில்லை.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் எல்லா பக்கமும் போய் ஹீரோயின்-கம்-கவர்ச்சி பாம் ஆகவெடித்தவர்.. ஸாரி நடித்தவர் இப்போது ஒரு பாட்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்.

ஐயாவில் சரத்குமாருடன் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்ட மாளவிகாவுக்கு வசூல்ராஜாவில் சின்ன வேடம் தந்து தன் ஆதரவுகரத்தை நீட்டினார் கமல்.

இதைத் தொடர்ந்து சந்திரமுகியில் ரஜினி தயவில் வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். (நிலைமை இப்படியாகிப் போச்சா)

ஆனால், ஹீரோயினாக நடிக்கும் ஆசை மாளவிகாவை விடவில்லை. இதனால் கடும் முயற்சி எடுத்து மனச் சிறகினிலே.. என்றபடத்தில் ஹீரோயின் ரோலை பிடித்தார். ஆனால், சின்ன பட்ஜெட் படம் இது. ஹீரோ சின்னப் பையன் மிதுன் (கும்மாளம் புகழ்).

அதே நேரம் தெலுங்கில் மீண்டும் ஹீரோயின் வாய்ப்பைப் பிடிக்க இவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. தெலுங்கில்ராஜேந்திர பிரசாத்துடன் அவர் ஹீரோயினாக நடித்த படத்தில், தேவையில்லாமல் உடலில் தொட்டு விளையாடினார் ராஜேந்திரபிரசாத். இதை பரபரப்பாக்கியதால் மாளவிகாவை தெலுங்குப் படவுலகம் ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டது.

தெலுங்கு கைவிட்டுவிட்டதாலும் தமிழில் ஏனோதானோ என படங்கள் கிடைப்பதாலும் இப்போது இந்தியில் நுழைய முயற்சித்துவெற்றியும் கண்டிருக்கிறார் மாளவிகா.

அவருக்குக் கிடைத்துள்ள இந்திப் படத்தின் பெயர் சி யூ அட் 9 (இந்திப் படம் தான், இங்கிலீஷ் தலைப்பு வைத்திருக்கிறார்கள்..அந்த ஊரில் திருமாவளவன்கள் இல்லையோ?).

சி யூ அட் 9 என்றால் அர்த்தம் புரிகிறதல்லவா. படத்தின் தலைப்பைப் போலவே அதில் படு குஜாலான ரோலாம் மாளவிகாவுக்கு.

கிளாமர்னா கிளாமர் சும்மா.. இங்கிலீஷ் பட அளவுக்கு என்கிறார்கள். இதில் படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் மாளவிகா.

இப் படத்தில் வரும் முத்தக் காட்சிகளில் படு கிரக்கம் காட்டி, ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் மாளவிகா.

மார்லன் ரோட்ரிக்ஸ் என்வர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அதில் உதடுகளால் மட்டுமல்லாமல் உடலாலும்விளையாடியுள்ளாராம் மாளவிகா.

இதில் மாளவிகாவின் எழுச்சியைக் கண்ட சில இந்திவாலாக்கள் தங்களது படங்களிலும் மாளவிகாவுக்கு இடம் ஏற்படுத்தித்தந்துள்ளார்கள்.

இந்தப் படங்களிலும் முடிந்த வரை கவர்ச்சியை போட்டுத் தாக்கி இந்தியில் பிரபலமாகும் முடிவுக்கு வந்துள்ளாராம் மாளவிகா.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil