»   »  தமிழகத்தில் தலைவர் ரஜினிகாந்த்; தலைவி நயன்தாரா...- சொல்வது மலையாள மனோரமா!

தமிழகத்தில் தலைவர் ரஜினிகாந்த்; தலைவி நயன்தாரா...- சொல்வது மலையாள மனோரமா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தமிழகத்தில் ரஜினிகாந்தை தலைவர் என்று அழைப்பது போல, நயன்தாராவை தலைவி என்று அழைக்கத் தொடங்கியுள்ளதாக பிரபல பத்திரிகை மலையாள மனோரமா செய்தி வெளியிட்டுள்ளது.

நயன்தாரா நடிப்பில் தற்போது வெளி வந்துள்ள 'அறம்' படம் அவருக்குப் புதிய அங்கீகாரத்தைத் தந்துள்ளது. கோபி நயினார் இயக்கியுள்ள இப்படம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இப்படத்தை மேலும் பிரபலமாக்க முதல் முறையாக, 'அறம்' திரையிடப்பட்டுள்ள சென்னை திரையரங்குகளுக்கு நேரடியாக சென்று ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகிறார் நயன்தாரா.

வலைவாசிகள்

வலைவாசிகள்

தலைவி வாழ்க என்றும், தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்றும் நயன்தாராவைப் பாராட்டித் தள்ளுகின்றனர் வலைத் தளவாசிகள். குறிப்பாக தியேட்டர் விசிட்டுக்கு வந்த நயன்தாராவுக்கு கிடைத்த வரவேற்பு பிரமிக்க வைத்தது.

தமிழர்கள்

தமிழர்கள்

இந்த நிலையில், மலையாள மனோரமா பத்திரிகையின் ஆன்லைன் பதிப்பில் வெளியாகியுள்ள செய்தியில், "தமிழர்கள் ஜெயலலிதாவுக்குப் பிறகு அவ்வளவு எளிதில் வேறு யாரையும் 'தலைவி' என்று அழைத்ததில்லை. 'அறம்' திரைப்படத்துக்குப் பிறகு நயன்தாராவை, 'தலைவி' என்று அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

பிரமிக்க வைத்த வரவேற்பு

பிரமிக்க வைத்த வரவேற்பு

சென்னையில் நடந்த 'அறம்' திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க நயன்தாரா வந்தபோது, 'எங்கள் தலைவி நயன்தாரா வாழ்க' என ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். அந்த நிகழ்ச்சியில் 'அறம்' திரைப்படத்தில் வருவது போலவே எளிமையான காட்டன் உடை அணிந்தே நயன்தாரா பங்கேற்றார். ஆடம்பரங்களைத் தவிர்த்திருந்தார்.

தலைவி நயன்தாரா

தலைவி நயன்தாரா


சமீப காலங்களில் நயன்தாரா கவர்ச்சியாக நடிப்பதில்லை. 'மாயா' போன்ற கதையம்சம் கொண்ட சினிமாக்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். தமிழகத்தின் சமூகப் பிரச்னைககளைப் பற்றி பேசும் படமாக வெளிவந்த அறம், தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹீரோக்களை மட்டுமே கொண்டாடும் தமிழ்ச் சமூகத்தில் நடிகையைக் கொண்டாடுவது சாதாரண விஷயமில்லை. நயன்தாராவுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தை 'தலைவா' என்று அழைப்பதுபோல் நயன்தாராவுக்கு 'தலைவி' என்று பட்டம் அளித்துள்ளனர்.

திரைத்துறையிலிருந்து

திரைத்துறையிலிருந்து

ஜெயலலிதா மறைவுக்குப் பின், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டியவர்களே இந்த தென்மாநிலத்தில் தொடர்ந்து முதலமைச்சர் பதவியை அலங்கரித்து வருகின்றனர்,'' என அதில் குறிப்பிட்டுள்ளது.

English summary
Malayala Manorama online edition mentioned Rajini as Thalaivar, Nayanthara as Thalaivi of Tamil Nadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil