»   »  கலாபவன் மணி இறந்த அதே மருத்துவமனையில் மலையாள நடிகர் ஜிஷ்னு மரணம்

கலாபவன் மணி இறந்த அதே மருத்துவமனையில் மலையாள நடிகர் ஜிஷ்னு மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: கலாபவன் மணி உயிர் இழந்த அதே மருத்துவமனையில் மலையாள நடிகர் ஜிஷ்னு ராகவன் இன்று காலை 8.15 மணிக்கு மரணம் அடைந்தார்.

மலையாள நடிகர் ராகவனின் மகன் ஜிஷ்னு ராகவன்(35). 1987ம் ஆண்டு அவர் மலையாள படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். என்ஜினியரிங் படித்த ஜிஷ்னு 2002ம் ஆண்டு வெளியான நம்மாள் படம் மூலம் மலையாள திரையுலகில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

Malayalam actor Jishnu Raghavan passes away

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிகிச்சை பெற்று முழுவதும் குணமடைந்தார். ஆனால் கடந்த ஆண்டு அவருக்கு மீண்டும் புற்றுநோய் ஏற்பட்டது.

இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த அவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் இன்று காலை 8.15 மணிக்கு உயிர் இழந்தார். அவருக்கு தன்யா ராஜன் என்ற மனைவி உள்ளார்.

அதே அம்ரிதா மருத்துவமனையில் தான் கடந்த 6ம் தேதி நடிகர் கலாபவன் மணி மரணம் அடைந்தார். மணியின் மரணத்தால் ஏற்பட்ட சோகத்தில் இருந்து மலையாள திரையுலகம் மீளாத நிலையில் இன்று ஜிஷ்னு உயிர் இழந்துள்ளார்.

நடிகை கல்பனா, பாடகி ஷான் ஜான்சன், நடிகர் வி.டி. ராஜப்பன், இயக்குனர் ராஜேஷ் பிள்ளை ஆகியோர் இந்த ஆண்டில் உயிர் இழந்துள்ளனர். அடுத்தடுத்து கலைஞர்கள் மரணம் அடைந்துள்ளதால் மலையாள திரையுலகம் பேரதிர்ச்சியில் உள்ளது.

English summary
Malayalam actor Jishnu Raghavan passed away at Amrita hospital in Kochi after losing battle with cancer.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil