»   »  ‘குண்டு’ உடலும் ஒரு அழகு... திறமையான நடிப்பால் நிரூபித்தவர் கல்பனா!

‘குண்டு’ உடலும் ஒரு அழகு... திறமையான நடிப்பால் நிரூபித்தவர் கல்பனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அழகு என்பது உடலின் புறத்தில் மட்டும் இல்லை என தனது அபாரமான திறமையால் நிரூபித்துக் காட்டியவர்களில் நடிகை கல்பனாவும் ஒருவர்.

பிரபல நடிகை ஊர்வசியின் அக்காவும், நடிகையுமான கல்பனா(50) இன்று காலை சடலமாக ஹைதராபாத் ஹோட்டல் அறையில் மீட்கப்பட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிப் படங்களில் நடித்து வந்த கல்பனா, தெலுக்குப் பட ஷூட்டிங்கிற்காக சென்ற போது இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

பூசிய உடல்வாகு...

பூசிய உடல்வாகு...

நடிகைகள் என்றாலே சிக்கென ஜீரோ சைஸ் உடலோடு இருக்க வேண்டும் எனக் கருதப்பட்ட காலத்தில், சற்று பூசிய உடல்வாகோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கல்பனா.

குண்டு கல்பனா...

குண்டு கல்பனா...

அவரது உடலமைப்பைக் குறிப்பிடுவது போல், அவரது பெயரில் ‘குண்டு' என்ற வார்த்தையும் அடையாளமாகச் சேர்ந்து கொண்டது. ஆனாலும் சற்றும் கவலைப்பட்டவர் இல்லை கல்பனா.

சின்னவீடு...

சின்னவீடு...

1985ம் ஆண்டு பாக்யராஜின் சின்னவீடு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கல்பனா. அப்படத்தினைத் தொடர்ந்து சினிமாவிற்காக தன் எடையைக் குறைத்துக் கொள்ளாமல், தொடர்ந்து தன் பூசிய உடல்வாகுடனேயே திரைப்படங்களில் நடித்தார்.

சதிலீலாவதி...

சதிலீலாவதி...

அதிலும் அதிக எடையால் புறக்கணிக்கப்படும் பெண் கதாபாத்திர வேடங்கள் கல்பனாவிற்கு சரியாகப் பொருந்தவே, சின்னவீடு, சதிலீலாவதி உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

டும்டும்டும்...

டும்டும்டும்...

டும்டும்டும் படத்தில் கல்பனாவின் வெகுளியான வேடம் மிகவும் பேசப்பட்டது. அதேபோல், பம்மல் கே சம்பந்தம் படத்திலும் கல்பனாவின் கதாபாத்திரம் மிகவும் ரசிக்கப்பட்டது.

திறமையான நடிகை...

திறமையான நடிகை...

தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு படங்களே நடித்திருந்தாலும், தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தார் கல்பனா.

தேசிய விருது...

தேசிய விருது...

தமிழை விட அதிகம் மலையாளப் படங்களில் நடித்துள்ள கல்பனா, தனிச்சல்ல ஞான் என்ற படத்திற்காக 60வது தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில், சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதினை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kalpana, who had won the national award the best actor in a supporting role in the film Njaan Thanichalla (2012), died reportedly due to a heart attack at a hotel in Hyderabad during early hours on Monday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil