Just In
- 16 min ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 49 min ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
- 1 hr ago
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
- 1 hr ago
குருவாயூரில் சாமி தரிசனம் செய்த சோம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன்முறையாக வெளியிட்ட வீடியோ!
Don't Miss!
- Sports
அதே தப்பு.. இவ்ளோ காசை வேஸ்ட் பண்ணிட்டீங்களே.. சிக்கலில் சிஎஸ்கே.. கடுப்பில் ரசிகர்கள்!
- News
சீனா அத்துமீறினால்.. ஆக்ரோஷமான பதிலடி கொடுக்க தயார்.. விமானப்படை தளபதி பதாரியா திட்டவட்டம்
- Finance
Budget 2021.. ஹெல்த்கேர் துறையில் ஒதுக்கீடு 40% வரை அதிகரிக்கலாம்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மலையாள நடிகர் மீது பெண் பாலியல் புகார்.... கஷ்டப்பட்டு தப்பியதாகக் குற்றச்சாட்டு!
மும்பை: மும்பையைச் சேர்ந்த பெண் இயக்குனர் ஒருவர் மலையாள நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக பிரபலங்களினால் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்களின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே போகிறது.
நடிகைகள், பாடகிகள் என பலரும் தைரியமாக முன்வந்து தங்களின் கசப்பான அனுபவங்களை பகிர்ந்துவரும் நிலையில், மலையாள நடிகர் முகேஷ் மீதும் புகாரெழுந்துள்ளது.

முகேஷ்
மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருந்தவர் முகேஷ். நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் கோலோச்சியவர். அரசியலில் களமிறங்கிய முகேஷ் தற்போது கொல்லம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

மீ டூ ஹேஷ்டேக்
மும்பையைச் சேர்ந்த கேஸ்டிங் இயக்குனர் தெஸ் ஜோசப், தான் ஒரு மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சியை இயக்கியபோது நடிகர் முகேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக #meetoo ஹேஷ்டேக்கில் பகிர்ந்துள்ளார்.
|
ஹோட்டல் அறை
19 வருடங்களுக்கு முன்பு நடிகர் முகேஷ் மலையாளத் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தெஸ் ஜோசப் இயக்கியுள்ளார். அப்போது முகேஷ் தான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கு அவரை அழைத்ததாகவும், ஒரு கட்டத்தில் தெஸ் ஜோசப் தங்கியிருந்த ஹோட்டல் அறையை மாற்றி முகேஷின் அறைக்கு பக்கத்திலேயே தங்க கட்டாயப்படுத்தினார் என்றும் பதிவிட்டுள்ளார்.

உதவி
அப்போது சுதாரித்துக்கொண்ட தெஸ் ஜோசப் தன்னுடைய மேலதிகாரியாக இருந்த டெரிக் ஓ ப்ரியனைத் தொடர்புகொண்டு விவரத்தைச் சொன்னதும் உடனடியாக பிளைட் புக் செய்து மும்பைக்கு திரும்பிச் செல்ல உதவினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், துரிதமாக செயல்பட்ட டெரிக்குக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

பங்கு
மேலும் இதுபோல் பெண்களை வேட்டையாடுபவர்களுக்கு ஆதரவாக செயல்படும் ஹோட்டல் ஊழியர்களுக்கும் இதில் பங்குள்ளது எனக் குறிப்பிட்டுள்ள தெஸ் ஜோசப், சென்னையின் பிரபலமான நட்சத்திர விடுதியொன்றையும் கடுமையாக சாடியுள்ளார்.

முகேஷ்
இதுதொடர்பாக நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான முகேஷிடம் கேட்கபட்டதற்கு, இருபது வருடங்களுக்கு முன்னால் என்ன நடந்ததென்று ஞாபகம் இல்லை. உங்கள் இஷ்டத்திற்கு எதுவேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள் என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.