»   »  மம்மூட்டி, மோகன்லாலுடன் நடித்த ரேகா மோகன் வீட்டில் பிணமாகக் கண்டுபிடிப்பு

மம்மூட்டி, மோகன்லாலுடன் நடித்த ரேகா மோகன் வீட்டில் பிணமாகக் கண்டுபிடிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சூர்: மோகன்லால், மம்மூட்டி படங்களில் நடித்துள்ள நடிகை ரேகா மோகன் திருச்சூரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலையாள நடிகை ரேகா மோகன்(45). அவரது கணவர் மோகன் துபாயில் வேலை பார்த்து வருகிறார். ரேகா கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஷோபா சிட்டி அபார்ட்மென்ட்டில் வாடகைக்கு குடியிருந்தார்.

Malayalam actress Rekha Mohan found dead in her apartment

இந்நிலையில் மோகன் இரண்டு நாட்களாக ரேகாவை தொடர்பு கொள்ள முயன்றும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மோகன் திருச்சூர் போலீசாருக்கு நேற்று தகவல் கொடுத்தார்.

அவர்கள் வந்து பார்த்தபோது வீடு உள்புறமாக பூட்டியிருந்தது. கதவை உடைத்து பார்த்தபோது ரேகா பிணமாகக் கிடந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்மூட்டி படங்களில் நடித்தவர் ரேகா. அவர் மாயம்மா என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். தமிழ் தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த சபர்ணா தனது வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மற்றொரு நடிகையும் இறந்து கிடந்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
Popular film and TV actress Rekha Mohan was found dead in her apartment on Saturday, said police. The 45-year-old actress shared screen space with leading actors like Mammootty (in Udyanapalakan) and Mohanlal (in Yathramozhi) besides acting in popular TV serials.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil