twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலையாள சினிமாவின் தந்தை அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த தமிழரே: குமரிஅனந்தன் அறிக்கை

    |

    Malayalam cinema's father a Tamizhian: Kumari Anandhan
    சென்னை: மலையாள சினிமாவின் தந்தை அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த தமிழரே என அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன்.

    சென்னையில் தென்னிந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ள வேளையில், மலையாளச் சினிமாவின் தந்தை ஒரு தமிழர் என அறிக்கை விடுத்துள்ளார் தமிழக முன்னாள் காங்கிரஸ் தமிழர் குமரிஅனந்தன்.

    மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 'சென்னையில் நடைபெறும் சினிமா நூற்றாண்டு விழாவில் பல முக்கிய நிகழ்வுகள் நினைவூட்டப்படுகின்றன. மலையாள சினிமாவின் தந்தை என் ஊராகிய அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஜே.சி.டேனியல் என்ற தமிழரேயாவார். 1928-ல் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு நிலையத்தை தொடங்கி அவர் தயாரித்து 1930-ல் வெளியிட்ட விகத குமாரன் என்பதே முதல் மலையாள படம்.

    இந்த அங்கீகாரம் பெரும் பாடுபட்டு 6 ஆண்டுகளுக்கு பின் கேரள அரசிடம் பெறப்பட்டது. இப்போது ஆண்டுதோறும் கேரள அரசு மலையாள திரைப்பட வாழ்நாள் விருது ஜே.சி.டேனியல் பெயரால் வழங்கி வருகிறது. நான் இச்சாதனையாளரை சந்தித்து இருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

    English summary
    The father of Malayalam cinema is a Tamizhian says senior congress leader Kumari anandhan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X