»   »  தமிழுக்கு வரும் மலையாள காமெடியன்... விஜய் டி.வி தொகுப்பாளர் ஹீரோவாக நடிக்கும் படம்!

தமிழுக்கு வரும் மலையாள காமெடியன்... விஜய் டி.வி தொகுப்பாளர் ஹீரோவாக நடிக்கும் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கடந்த 2016-ம் ஆண்டு மலையாளத்தில் புதுமுகங்கள் நடித்து வெளியான படம் 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்'. நூறு நாட்கள் ஓடிய இந்தப்படத்தை திலீப்பின் நண்பரான நாதிர்ஷா என்பவர் தான் இயக்கியிருந்தார்.

இந்தப்படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளார் நாதிர்ஷா. தமிழிலும் அவரே இயக்கவுள்ள இந்தப்படத்திற்கு 'அஜித் ஃப்ரம் அருப்புக்கோட்டை' என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது.

Malayalam comedian enters tamil cinema

இந்தப் படத்தில் விஜய் டி.வி-யின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் தான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. அது யார் என்பது இன்னும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்படவில்லை.

'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' படத்தில் கதாநாயகனின் நண்பராக நடித்த காமெடி நடிகரான தர்மஜன் போல்காட்டி என்பவர் தமிழ் ரீமேக்கிலும் அதே கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம். மலையாளத்தின் வளர்ந்து வரும் காமெடி நடிகரான இவர் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்க இருக்கிறார்.

English summary
'Kattappanayile rithwik roshan' movie released in malayalam in the year 2016. This film was directed by Dilip's friend Nadirsha. This film will be remake in tamil titled as 'Ajith from Aruppukkottai'. Comedy actor Dharmajan bolgatty, who is a friend of the hero in Malayalam, doing same role in tamil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X