»   »  படப்பிடிப்பில் இறந்து போன இளம் இயக்குநர்

படப்பிடிப்பில் இறந்து போன இளம் இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லடாக்: மலையாள இளம் இயக்குனர்களில் ஒருவரான சாஜன் குரியன் லடாக் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியபோது இறந்த சம்பவம் மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மலையாளத்தில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் சாஜன் குரியன் இவர் ஏற்கனவே பசுபதி மற்றும் ஜெகதீஷ் ஆகிய இருவரையும் வைத்து தி லாஸ்ட் விஷன் மற்றும் டான்ஸிங் டெத் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார்.

Malayalam director Sajan Kurian dies in Ladakh

இவர் தனது எழுத்தில் வெளியான பிப்லியோ நாவலை ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஜாய் மேத்யூ ஆகியோரை வைத்து திகில் படமாக எடுத்து வருகிறார்.

படத்தின் பெயரையும் பிப்லியோ என்று வைத்திருக்கும் இவர் லடாக்கின் பணி சூழ்ந்த பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்.

படப்பிடிப்பு முழுவதும் ஏறத்தாழ முடிந்த நிலையில் திடீரென்று இவரின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. உடனே படக்குழுவினர் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்திருக்கின்றனர்.

எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் இறந்து விட்டார். லடாக்கின் தட்பவெட்ப நிலை மைனஸ் 24 டிகிரிக்கும் குறைவாக இருந்ததே இவரின் இறப்புக்குக் காரணம் என்று கூறுகின்றனர்.

English summary
Today Malayalam Young director Sajan Kurian or Sajan Samaya (33) dies in Ladakh, Jammu Kashmir.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil