»   »  முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்கும் இனி வரும் நாட்கள்!

முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்கும் இனி வரும் நாட்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் துளசிதாஸ் தமிழில் இயக்கும் படம் "இனி வரும் நாட்கள்".

எம்ஜேடி புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் முழுக்க , முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் கூட ஆண்கள் நடிக்கவில்லையாம் .

Malayalam director Thulasidass Tamil debut Ini Varum Naatkal

இனியா, ஆர்த்தி, சுபிக்சா, ஈடன், அர்ச்சனா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ளார் நதியா.

படம் குறித்து இயக்குநர் துளசிதாஸ் கூறுகையில், "டாக்குமெண்டரி எடுக்க போகும் கல்லூரி மாணவிகளின் பயணத்தில் நடக்கும் எதிர்பாராத சம்பவமும், அதைத் தொடர்ந்து நடக்கும் அதிர்ச்சிகளும், சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் திரைக்கதையாக அமைத்திருக்கிறோம்.

Malayalam director Thulasidass Tamil debut Ini Varum Naatkal

பெண்களுக்கு நடிப்பில் முக்கியத்துவம் எல்லா படங்களிலும் கிடைத்து விடுவதில்லை. ஆனால் இந்தப் படத்தில் முழுவதுமே பெண்கள் மட்டும் நடிப்பதால், அவர்கள் தங்கள் திறமையை வெளிகாட்ட ஒரு வாய்ப்பாக
அமைந்திருக்கிறது... பாட்டு, சண்டை காமெடி என்று பொழுதுபோக்கு அம்சங்களும் படத்தில் நிறைய இருக்கிறது ..

படத்தில் கதாநாயகிகள் இருக்கிறார்கள் கதாநாயகன் எங்கே? என்று கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை படத்தின் திரைக்கதையே நாயகன்," என்றார்.

படப்பிடிப்பு கம்பம் , நாகர்கோவில் , தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

English summary
Malayalam movie director Thulasi Dass is making his Tamil debut in Ini Varum Naatkal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil