»   »  சிந்துவின் சாதனையை பார்த்து துப்பினால் என்ன?: மலையாள இயக்குனர் திமிர் பேச்சு

சிந்துவின் சாதனையை பார்த்து துப்பினால் என்ன?: மலையாள இயக்குனர் திமிர் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ரியோ ஒலிம்பிக் போட்டியில் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து அனைவரும் என்னத்த கொண்டாடுகிறீர்கள், நான் அதை துப்பினால் என்ன என்று கேட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் மலையாள இயக்குனர் சனால் குமார் சசிதரன்.

ரியோடி ஜெனீரோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட பி.வி. சிந்து பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார். இதையடுத்து இந்திய மக்கள் சிந்துவின் வெற்றியை நேரிலும், சமூக வலைதளங்களிலும் கொண்டாடி வருகிறார்கள்.

Malayalam director wants to spit on Sindhu's achievement

இந்நிலையில் மலையாள பட இயக்குனர் சனால் குமார் சசிதரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மலையாளத்தில் கூறியிருப்பதாவது,

அனைவரும் சிந்துவை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் கொண்டாட என்ன இருக்கிறது. சிந்துவின் சாதனையை பார்த்து நான் துப்பினால் என்ன என்று கேட்டுள்ளார்.

இதை பார்த்த பலரும் குமாரை திட்டித் தீர்த்தனர். ஊரெல்லாம் தன்னை கழுவிக் கழுவி ஊத்துவதை பார்த்த இயக்குனர் தான் காமெடிக்காக அவ்வாறு போஸ்ட் போட்டதாக தெரிவித்து சமாளித்துள்ளார்.

English summary
Malayalam director Sanal Kumar Sasidharan asked what is there to celebrate about Sindhu and what if he spits on this.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil