Don't Miss!
- News
என் பைக்கை ஓவர்டேக் பண்ணுவியா? பொங்கிய 'குங்பூ' மாஸ்டர்.. தாக்கப்பட்ட ஜொமோட்டோ ஊழியர்.. பரிதாபம்
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Technology
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Finance
கூகுள் ஊழியரின் கண்ணீர்..பிரசவ அறை,4கை குழந்தை, தாய் மரணம்,இண்டர்வியூவ்-க்கு மத்தியில் பணிநீக்கம்..!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பாலியல் வழக்கில் பிரபல இயக்குநர் கைது.. அதிர்ச்சியில் திரைத்துறை !
கேரளா : பிரபல இயக்குநர் ஒருவர் பாலியல் வழங்கில் கைது செய்யப்பட்டுள்ளது திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மலையாளத் திரைப்பட இயக்குனரான லிஜு கிருஷ்ணா தற்போது 'படவேட்டு' படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில், நவின் பாலி மற்றும் மஞ்சுவாரியர் இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டு இருந்த போது, கண்ணூர் மாவட்ட போலீஸார் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட லிஜு கிருஷ்ணாவை கொச்சிக்கு அழைத்துச் சென்று மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

தன்னுடன் பணியாற்றிய பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவரது வீடு மற்றும் பல்வேறு இடங்களில் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக பாதிக்கப்பட்ட பெண் கண்ணூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண்ணின் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு திரைப்பட இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
லிஜு கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளதால் 'படவேட்டு' படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நடிகர் சன்னி வெய்ன் தயாரிக்கிறார். மஞ்சு வாரியர், அதிதி பாலன், ஷம்மி திலகன் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படம் தான் லிஜு கிருஷ்ணா முதல் அறிமுகத் திரைப்படமாகும். முதல் படத்திலேயே பாலியல் வழங்கில் சிக்கி உள்ளார்.
நடிகைகள் பார்வதி, கீது மோகன்ஸ்தாஸ், ரீமா கல்லிங்கல், ரேவதி உள்பட பலர் பங்கேற்றுள்ள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பு வழக்கு முடியும்வரை கேரள திரைத்துறையில் பணியாற்ற லிஜூ கிருஷ்ணாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
நிவின்
பாலி
பட
டைரக்டர்
பலாத்கார
வழக்கில்
கைது