»   »  கதகளி படத்துக்கு தடை... சென்சாரைக் கண்டித்து நிர்வாணப் பாடல்!

கதகளி படத்துக்கு தடை... சென்சாரைக் கண்டித்து நிர்வாணப் பாடல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கதகளி படமா... அது பொங்கலுக்கே வந்திருச்சே என்ற யோசனை உங்கள் மனதிலோடுவது புரிகிறது.

இது 'ஒரிஜினல் கதகளி' தேசத்தைச் சேர்ந்தவர்கள் எடுத்த படம். மலையாளப் படம்.

ஆஸ்கர் சைஜோ இயக்கியுள்ள இந்தப் படத்தில் நிர்வாண காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி சென்சார் போர்டு அந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தர மறுப்பு தெரிவித்து விட்டது.

Malayalam film 'Kathakali' faces clash with CBFC over cuts

இதனைக் கண்டித்து கடந்த வாரம் இந்த படத்தின் இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள், பிராந்திய தணிக்கை வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

படத்தின் கதை, சமூகத்தில் ஒதுக்கப்பட்ட ஒருவன், தனக்கென்று தனி அடையாளத்திற்காக போராடுவதுதான். அந்தப் போராட்டத்தில் கிடைக்கும் தோல்வியால், தனது 'கதகளி' ஆடைகளைக் களைந்து விட்டு, நிர்வாணமாக ஒரு ஆற்றுக்குள் இறங்குகிறான்... என்று போகிறது.

Malayalam film 'Kathakali' faces clash with CBFC over cuts

இந்தப் படத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையே தணிக்கை வாரியத்தைக் கண்டித்து 'கதகளிக்கு நீதி வேண்டி ஒரு நிர்வாண பாடல்' எனும் பெயரில் யூடியூப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

சமீபத்தில்தான் உத்தா பஞ்சாப் படம் தணிக்கைக் குழுவால் படாத பாடுபட்டு வெளியானது. இதற்காக நீதிமன்றத்திடம் குட்டும் பட்டது நினைவிருக்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil