»   »  தமிழில் வேகமெடுக்கும் மலையாள ஹீரோக்கள்!

தமிழில் வேகமெடுக்கும் மலையாள ஹீரோக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் யார் வேண்டுமானாலும் ஹீரோவாகி விடலாம். நடிப்பே தெரியாமல் கூட காலத்தைத் தள்ளலாம். ஆனால் மலையாளத்தில் அப்படி இல்லை. திறமையும் உழைப்பும் இருந்தால்தான் சினிமாவிலேயே இருக்க முடியும். இதனால் தான் சொந்த மொழியான மலையாளத்தில்பி ரகாசிக்க முடியாத ஆர்யா கூட தமிழில் தொடர்ந்து நடிக்க முடிகிறது.

தன் நடிப்பால் மலையாள ரசிகர்களை கவர்ந்து நம்பர் ஒன் ஹீரோவாக முன்னேறி இருப்பவர் ஃபகத் பாசில். பிரபல இயக்குநர் பாசிலின் மகனான இவர் வழுக்கை தலையோடு ஹீரோவாக அறிமுகமானபோது வரவேற்றவர்களைவிட கிண்டல் செய்தவர்களே அதிகம். ஆனால் இன்று அவர்கள் எல்லாம் வாயடைத்து போகும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.

Malayalam heroes rushing to Tamil Industry

மலையாளத்தில் வரிசையாக ஹிட்களைக் கொடுக்கும் ஃபகத் அடுத்த கட்டமாக தமிழிலும் இப்போது கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.

மோகன் ராஜா இயக்க சிவகார்த்திகேயன், நயன் தாரா நடிக்கும் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கும் ஃபகத் பாசிலுக்கு அந்த படம் இன்னும் துவங்காத நிலையில் அதற்குள்ளாகவே இன்னும் இரண்டு படங்களின் இயக்குநர்கள் ஃபகத் பாசிலை அணுகி இருக்கிறார்கள். அதில் ஒரு கதை பிடித்துப்போனதால் ஹீரோவாக நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம்.

ஃபகத் பாசில் தமிழுக்கு அடியெடுத்து வைப்பது இங்கிருக்கும் ஹீரோக்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

மலையாளத்தை விட தமிழில் சம்பளம் பல மடங்கு என்பதால் ஃபகத்பாசில், நிவின் பாலி, துல்கர் சல்மான் என மலையாள ஹீரோக்கள் தமிழ் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். ஜாக்கிரதை தமிழ் ஹீரோஸ்!

English summary
Most of young Malayalam Heroes including Dulquer Salman, Fahad Fasil are want to concentrate in Tamil film industry due to high salary.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil