twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலையாள நடிகர் ஜிகே பிள்ளை காலமானார்... கேரள முதலமைச்சர் இரங்கல்!

    |

    திருவனந்தபுரம் : மலையாள திரையுலகின் மூத்த நடிகர் ஜிகே பிள்ளை காலமானார். அவருக்கு வயது 97,

    மலையாளத்தில் 325 படங்களுக்கு மேல் நடித்துள்ள பிள்ளை அதிகமாக வில்லன் கேரக்டர்களில் நடித்துள்ளார்.

    இவர் பிரேம் நசீருடன் சிறப்பான தொடர்பு கொண்டிருந்தவர் பிள்ளை.

    ஆண் குழந்தைக்கு அப்பாவான விக்ரமின் கோப்ரா பட நடிகர்... யாருன்னு பாருங்க! ஆண் குழந்தைக்கு அப்பாவான விக்ரமின் கோப்ரா பட நடிகர்... யாருன்னு பாருங்க!

    மலையாள பழம்பெரும் நடிகர்

    மலையாள பழம்பெரும் நடிகர்

    மலையாளத் திரையுலகின் மூத்த நடிகரான ஜிகே பிள்ளை உடல்நலக் குறைவு காரணமாக இன்றைய தினம் திருவனந்தபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 97. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த இவர், அதையடுத்து திரையுலகில் கால் பதித்தார்.

    325 படங்களில் நடித்தவர்

    325 படங்களில் நடித்தவர்

    அதிகமாக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிள்ளை 325 படங்களுக்கம் மேற்பட்டு நடித்துள்ளார். கடந்த 1954ல் ஸ்நேகசீமா என்ற படத்தில் சத்யனுக்கு வில்லனாக தனது நடிப்பு பயணத்தை துவக்கியவர் பிள்ளை. தொடர்ந்து பல்வேறு கேரக்டர்களில் நடித்துள்ளார்.

    பிரேம் நசீரின் பள்ளித்தோழர்

    பிரேம் நசீரின் பள்ளித்தோழர்

    மலையாள முன்னணி நடிகரான பிரேம் நசீருடன் நீண்ட காலங்களாக நல்ல தொடர்பை கொண்டவர் பிள்ளை. பிரேம் நசீர் மற்றும் பிள்ளை இருவரும் பள்ளிக் கால தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் வில்லன் கேரக்டர்கள் மூலம் சிறப்பான அங்கீகாரத்தை பெற்ற இவர், தொடர்ந்து பல்வேறு கேரக்டர் ரோல்களிலும் நடித்துள்ளார்.

    80களின் இறுதிவரை நடிப்பு

    80களின் இறுதிவரை நடிப்பு

    ஸ்னபக யோகனன், தும்போலார்ச்சா, லைட் ஹவுஸ், நாயரு பிடிச்ச புலிவால், கன்னூர் டீலக்ஸ், ஸ்தனதி சரம்மா மற்றும் கார்யஸ்தன் உள்ளிட்ட பல படங்களில் இவரது கேரக்டர் சிறப்பான பெயரை பெற்றன. 80களின் இறுதி வரை இவர் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்தார்.

     பன்முக திறமை

    பன்முக திறமை

    நடிப்பு மட்டுமின்றி, அடூர் கோபாலகிருஷ்ணனிடம் ஸ்வயம்வரம் படத்திற்காக டைரக்ஷன் மற்றும் எடிட்டிங்கிலும் இவர் உதவியாக இருந்துள்ளார். தொடர்ந்து பல்வேறு டிவி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். இவரது முதல் சீரியல் கடமட்டத்து கத்தனார்.

    கேரள முதல்வர் இரங்கல்

    கேரள முதல்வர் இரங்கல்


    இந்நிலையில் ஜி கேசவன் பிள்ளையின் மறைவிற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். கருப்பு வெள்ளை படங்களின் காலத்திலிருந்து சீரியல்கள் வரை 60 ஆண்டுகளாக அவருடைய ஆளுமை சினிமாத்துறையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Malayalam veteran actor GK Pillai die at the age of 97.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X