»   »  பெருசா எதிர்பார்த்து போய் மலேசியாவில் அசிங்கப்பட்ட 'விஷால் அன்ட் கோ'

பெருசா எதிர்பார்த்து போய் மலேசியாவில் அசிங்கப்பட்ட 'விஷால் அன்ட் கோ'

Posted By:
Subscribe to Oneindia Tamil
நாடு விட்டு நாடு சென்று அசிங்கப்பட்ட நடிகர்கள்

சென்னை: விஷால் அன்ட் கோ மலேசியா வரை சென்று அசிங்கப்பட்டு வந்துள்ளனர் என்று நெட்டிசன்ஸ் சிரிக்கிறார்கள்.

நடிகர் சங்க கட்டிடம் கட்ட முதலில் நட்சத்திர கிரிக்கெட் நடத்தினர். அதற்கு சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோரை அழைக்கவில்லை. வசூல் எதிர்பார்த்தபடி அமையவில்லை.

இந்நிலையில் மலேசியா சென்று நட்சத்திர கலைவிழா நடத்தினார்கள்.

பத்திரிகை

பத்திரிகை

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்ட சென்றவர்களை பிச்சை எடுக்க இங்கு வருகிறீர்களா என்று கேட்டு செய்தி வெளியிட்டு மலேசியா பத்திரிகை அசிங்கப்படுத்தியது.

கலைஞர்கள்

கலைஞர்கள்

மலேசியாவில் நட்சத்திர கலைவிழாவை பார்க்க ஏராளமானோர் வருவார்கள் நிதி பெரிய அளவில் கிடைக்கும் என்று எதிர்பார்த்த விஷால் அணியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

பிரபலங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பார்வையாளர்கள் வரவில்லை. இவர்கள் கட்டிடம் கட்ட நாங்கள் ஏன் பணம் தர வேண்டும் என்று மலேசியா மக்கள் விழித்துக் கொண்டனர் என்று நெட்டிசன்ஸ் கூறுகிறார்கள்.

கமல்

கமல்

அரசியலில் குதிக்கப் போகிறேன் என்று அறிவித்த கையோடு ரஜினி மலேசியா விழாவில் கலந்து கொண்டார். ரஜினி, கமல் வந்தும் நிதி வசூலாகவில்லை. நிகழ்ச்சி நடந்த இடம் காற்று வாங்கியதாம்.

எவ்வளவு?

எவ்வளவு?

இந்த நடிகர் சங்க கட்டிடம் கட்ட எவ்வளவு பணம் தான் இந்த விஷாலுக்கு தேவைப்படுகிறது. அவர்களிடம் கோடி, கோடியாய் கொட்டிக் கிடக்கும்போது கட்டிடம் கட்ட மட்டும் மக்களிடம் பணம் பறிக்கிறார்களே என்று சமூக வலைதளங்களில் மக்கள் விளாசுகிறார்கள்.

நல்லது

நல்லது

மக்களுக்கு நல்லது செய்யத் துடிக்கும் விஷாலும், ரஜினியும் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிக் கொடுத்து சக நடிகர்களுக்கு முதலில் நல்லது செய்யலாமே என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Vishal and team have got disppointed as Malaysia Natchathira Kalaivizha is not a success. People are blasting Vishal and team for expecting people to help them build Nadigar Sangam building while they are stinking rich.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X