»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்:

மலேசியாவில் இன்று நடக்கும் பிரம்மாண்டமான நட்சத்திர கலைவிழாவில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து முக்கிய நிகழ்ச்சியைவழங்குவார்கள் என்று தெரிகிறது.

நடிகர் சங்கக் கடனை அடைப்பதற்காகவும் நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவுவதற்காகவும் நடிக-நடிகைகள் இன்று 27 மலேசியாவிலும்நாளை சிங்கப்பூரிலும் கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

இன்று கோலாலம்பூரில் புத்ரா கலையரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் ரஜினியும் கமல்ஹாசனும் கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பின்ஒன்றாக இணைந்து மேடையில் தோன்ற உள்ளனர். பிற நடிகை, நடிகர்கள் என்ன நிகழ்ச்சிகள் வழங்கப் போகிறார்கள் என்றுஅறிவிக்கப்பட்டுவிட்டது.

ஆனால், இந்த இருவரும் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அது சஸ்பெண்சாகவே வைக்கப்பட்டுள்ளது.

நாளை சிங்கப்பூரில் எக்ஸ்போ 2002 அரங்கத்தில் தமிழக சினிமா கலைஞர்களின் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இந்த நிகழ்ச்சிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எல்லா டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகநிகழ்ச்சிக்கான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விழாக்களில் மொத்தம் 53 நடிகர்-நடிகைகளும் 41 நடனக் கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர்.

நடிகர்கள் அர்ஜூன், கார்த்திக், பிரபு, விஜயகாந்த், சரத்குமார், விக்ரம், சூர்யா, பிரபுதேவா, பிரசாந்த், சத்யராஜ், விஜய், மாதவன்,தியாகராஜன், சார்லி, ஷாம், நாசர், பிரகாஷ்ராஜ், வடிவேல், எஸ்.எஸ். சந்திரன், விவேக், சிலம்பரசன்,அப்பாஸ், ராதாரவி, செந்தில், தியாகு,தாமு, வையாபுரி ஆகியோரும்

நடிகைகள் குஷ்பு, ரோஜா, ரம்யாகிருஷ்ணன், சங்கவி, மும்தாஜ், கவுசல்யா, அபிராமி, காயத்ரி ரகுராம், நடிகைகள் மீனா, ஜோதிகா,தேவயானி, ரம்பா, சிம்ரன், கிரண், விந்தியா, திரிஷா, ரேவதி, மனோரமா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

கடந்த ஒரு மாதமாக டான்ஸ் மாஸ்டர் கலா இவர்களுக்கு நடனப் பயிற்சி அளித்தார். கலாவின் குழுவைச் சேர்ந்த 41 நடனக் கலைஞர்களும்நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்காக கிட்டதட்ட எல்லா முக்கிய நடிகர்களும் சென்றுவிட்டதால் சென்னை ஸ்டுடியோக்கள் மூடப்பட்டுவிட்டன. இந்த 5நாட்களும் எநத்ப் படப்பிடிப்பும் நடக்கப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil