For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  திரைத் துளி

  By Staff
  |

  கோலாலம்பூர்:

  தமிழக நடிகர்-நடிகைகளின் நட்சத்திரக் கலைவிழா நிகழ்ச்சிகள் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பிரம்மாண்டமானஅளவில் நடந்தன.

  நடிகர் சங்கக் கடனை அடைப்பதற்காகவும் நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவுவதற்காகவும் தமிழ்த் திரைப்படநடிகர்-நடிகைகள் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

  அதன்படி முதற்கட்டமாக மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் புத்ரா கலையரங்கில் கடந்த சனிக்கிழமை இரவுமுதல் நட்சத்திரக் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

  ரஜினி-கமல் ஆட்டம்:

  ரஜினியும் கமல்ஹாசனும் கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பின் ஒன்றாக இணைந்து மேடையில் தோன்றினர்.

  "நினைத்தாலே இனிக்கும்" படத்தின் "எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்..." என்ற பாடலுக்கு ரஜினியும்கமலும் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

  நிகழ்ச்சி துவங்கியதிலிருந்து இவர்கள் இருவரும் எப்போது தான் வருவார்களோ என்று அரங்கில் நிறைந்திருந்த 15ஆயிரம் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

  ஆனால் கலைநிகழ்ச்சிகள் முடிவடைவதற்குச் சற்று முன்னர் தான் ரஜினியும் கமலும் மேடையில் தோன்றினர்.

  ""சலக்கு சலக்கு சரிகை சேல...""

  இதற்கிடையே சரத்குமாரும் தேவயானியும் இரண்டு பாடல்களுக்கு ஜோடி சேர்ந்து ஆடினார்கள்.

  "சூரியவம்சம்" படத்தில் இடம் பெற்றுள்ள "சலக்கு சலக்கு சரிகை சேல..." என்ற பாட்டுக்கு நடனக் கலைஞர்களுடன்அவர்கள் ஆடிய ஆட்டத்தில் அரங்கமே அதிர்ந்தது.

  பின்னர் "தென்காசி பட்டணம்" படத்தில் வரும் "அன்னக்கிளிகள் அன்புக் கதை..." என்ற பாடலுக்கும்சரத்குமார்-தேவயானி ஜோடி நடனம் ஆடியது.

  விஜய்-சிம்ரன் கலக்கல்:

  சமீபத்தில் ரிலீசாகி உலகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் "யூத்" படத்தின் "ஆள் தோட்ட பூபதி நானடா..." என்றபாடலில் ஆடிய விஜய்யும் சிம்ரனும் கோலாலம்பூர் மேடையிலும் அதே பாடலுக்கு ஆடி ரசிகர்களையும் ஆடவைத்தனர்.

  அதே போல் "ஷாஜகான்" படத்தின் "சரக்கு வச்சுருக்கேன் இறக்கி வச்சுருக்கேன்..." பாடலுக்கு அப்பாஸுடன் கவர்ச்சிஆடிய மீனா ரசிகர்களைச் சொக்க வைத்தார்.

  ""மலே மலே மருத மலை...""

  தமிழகத்தின் கவர்ச்சிப் புயலான மும்தாஜ் "சாக்லேட்" படத்தின் "மலே மலே மருத மலை..." பாடலுக்கு படுகிளாமராக டான்ஸ் ஆடி ரசிகர்களைச் சூடாக்கினார்.

  அதே போல் "ஒல்லிக்குச்சி உடம்புக்காரி..." பாடலுக்கு விந்தியாவும் படு கவர்ச்சி நடனம் போட்டார்.

  இவற்றைத் தவிர "சுப்பம்மா சுப்பம்மா..." பாடலுக்கு சங்கவியும், "பைனாப்பிள் கன்னத்தோடு..." பாடலுக்குரம்யாகிருஷ்ணனும் நடனக் குழுவினருடன் ஆடி அசத்தினர்.

  "ஏலே இமயமலை எங்க ஊரு சாமி மலை..." என்ற பாடலுக்கு விஜயகாந்த்தும் நடனக் கலைஞர்களும் சேர்ந்தஆடினார்கள்.

  "உத்தமபுத்திரன்" படத்தில் வரும் "யாரடீ நீ மோகினி..." என்ற பாடலுக்கு பிரபு நடனம் ஆடி அனைத்துரசிகர்களையும் கவர்ந்தார். அதே போல் "எங்க வீட்டுப் பிள்ளை"யில் வரும் "நான் ஆணையிட்டால்..." பாடலுக்குஎம்.ஜி.ஆர். போலவே ஆடி ரசிகர்களின் கரகோஷங்களை அள்ளிச் சென்றார் சத்யராஜ்.

  இவர்களைத் தவிர சூர்யா, பிரசாந்த், ரோஜா, நெப்போலியன், ரேவதி, பிரகாஷ்ராஜ், அர்ஜூன், ஜோதிகா உள்படபல கலைஞர்களும் ஆடிப் பாடி ரசிர்களைக் கவர்ந்தனர்.

  நிகழ்ச்சியின் முடிவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட அனைத்து 53 நடிகர்-நடிகைகளும் 41 நடனக்கலைஞர்களும் சேர்ந்து ஒன்றாக நடனம் ஆடி ரசிகர்களைப் பரவசப்படுத்தினர்.

  சுமார் 10 ஆயிரம் ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் அரங்கத்திற்கு வெளியே நின்று கொண்டு இருந்தனர்.

  சிங்கப்பூரில்...

  இந்நிலையில் சிங்கப்பூரில் "எக்ஸ்போ 2002" அரங்கத்தில் தமிழக சினிமா கலைஞர்களின் இரண்டாவது ரவுண்டுகலை நிகழ்ச்சிகள் நடந்தன.

  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன.

  "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு" என்ற பாடலுக்கு மீனாவும் குஷ்புவும் 15நடனக் கலைஞர்கள் சூழ ஆடினார்கள்.

  இதையடுத்து "செய் ராஜா செய்... உன் சேவை எல்லாம் செய்..." என்ற "பஞ்சதந்திரம்" பாடலுக்கு ரம்யா கிருஷ்ணன்ஆடிக் கலக்கினார்.

  ரசிகையுடன் ஆடிய பிரசாந்த்:

  இதற்கிடையே பிரசாந்த் ஒரு புதுமையான நிகழ்ச்சியை நடத்தினார். மேடையில் பேசிக் கொண்டிருந்த அவர்திடீரென்று ரசிகர்களை நோக்கி, இன்று உங்களில் யாருக்குப் பிறந்த நாள் என்று கேட்டார்.

  உடனே 16 வயது பெண் ஒருவர் கையைத் தூக்கினார். அவரை மேடைக்கு வரும்படி அழைத்த பிரசாந்த், அந்தரசிகையுடன் நடனமாடி அவருக்குப் பரிசும் கொடுத்துக் கலக்கினார்.

  ஒளியும் ஒலியும்:

  இதையடுத்து பழைய பாடல்களும் புதிய பாடல்களும் கலந்த புதுமையான "ஒளியும் ஒலியும்" என்ற நிகழ்ச்சிநடத்தப்பட்டது.

  சத்யராஜ், பிரபு, கார்த்திக், ராதாரவி, பிரகாஷ்ராஜ், விவேக், செந்தில், மனோரமா மற்றும் கோவை சரளா ஆகியோர்இந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடினார்கள்.

  ரசிகர்களை நோக்கி ஓடிய ஷாம்:

  இதற்கிடையே "12பி" படப் பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்த ஷாம் திடீரென்று மேடையை விட்டிறங்கி ரசிகர்களைநோக்கி ஓடினார்.

  இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்து "ஹோ"வென்று கத்தினார்கள்.

  ""பஞ்சு மிட்டாய் சீல கட்டி...""

  இந்நிலையில் நெப்போலியனும் குஷ்புவும் சேர்ந்து கொண்டு "பஞ்சு மிட்டாய் சீல கட்டி..." என்ற பாடலுக்கு ஆடியபோது ரசிகர்கள் அதைத் தாளம் போட்டு ரசித்தனர்.

  மலேசியாவில் "சரக்கு வச்சிருக்கேன்..." பாடலுக்கு ஆடிக் கலக்கிய மீனா இங்கும் அதே பாடலுக்கு ஆடிரசிகர்களைக் கிறங்கடித்தார்.

  மலேசியாவில் கடைசி நேரத்தில் மேடையில் தோன்றியதைப் போலவே சிங்கப்பூரிலும் நிகழ்ச்சி முடிவடையும்நேரத்தில் தான் ரஜினியும் கமலும் தோன்றினர். ஆனால் இங்கு அவர்கள் ஆடவில்லை, பாடவில்லை. ரசிகர்களின்கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்தனர்.

  மறுநாள் காலை 8 மணிக்கே வேலைக்குப் போக வேண்டும் என்பதால் சிங்கப்பூரில் நடந்த கலைநிகழ்ச்சியைப்பார்ப்பதற்கு அந்நாட்டு தமிழர்களின் கூட்டம் குறைவாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் 10 ஆயிரம்பேர் உட்கார்ந்து ரசிக்கக் கூடிய இந்த அரங்கம் ஏறக்குறைய நிரம்பி விட்டது.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X