கோலாலம்பூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனான இன்றைய சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மலேசிய பிரதமர், ரஜினியை தலைவா என அழைத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழா நிகழ்ச்சிக்காக நேற்று இரவு கோலாலம்பூர் சென்றார் ரஜினிகாந்த்.
விழா தொடங்கும் முன் ரஜினியை தனது மாளிகைக்கு அழைத்து சந்தித்தார் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக். இந்த சந்திப்பின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அவர், "தலைவர் ரஜினியை மீண்டும், அதுவும் மலேசியாவில் சந்திப்பதில் மிகப் பெரிய மகிழ்ச்சி. மலேசியாவில் மகிழ்ச்சியாக தங்கியிருக்க வாழ்த்துகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச தலைவர், மலேசியாவின் பிரதமராக இருப்பவர் ரஜினிகாந்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்டு ட்விட் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.