»   »  போயஸ் கார்டனில் ரஜினியை சந்திக்கும் மலேசிய பிரதமர்: வீடு தேடி வரும் பதவி?

போயஸ் கார்டனில் ரஜினியை சந்திக்கும் மலேசிய பிரதமர்: வீடு தேடி வரும் பதவி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா வரும் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க உள்ளாராம்.

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் 5 நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார். அவருடன் அவரது மனைவி ரோஸ்மா மன்சூரும் வருகிறார். நஜீபும், ரோஸ்மாவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள்.

Malaysian PM to meet Rajinikanth in Chennai

இதையடுத்து இந்திய பயணத்தின்போது ரஜினியை சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து மலேசிய அதிகாரிகள் ரஜினியை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

நஜீபும், அவரது மனைவியும் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசக்கூடும் என்று கூறப்படுகிறது. மலேசியாவில் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர்.

இந்நிலையில் மலேசிய சுற்றுலாத் துறை அம்பாசிடராக ரஜினியை நியமிக்க அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து மலேசிய சுற்றுலாத் துறை அம்பாசிடராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to reports, Malaysian PM Najib Razak will meet superstar Rajinikanth at his Poes Garden residence during his 5 day tour in India.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil