»   »  ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்!

ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று சந்தித்தார் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்.

மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ முகமத் நஜிப் பின் துன் அப்துல் ரசாக் நேற்று சென்னை வந்தார். ஐந்து நாள் இந்திய பயணமாக வந்துள்ள அவரை வரவேற்று சென்னையில் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

Malaysian PM meets Rajinikanth at Chennai

அவருடன் மனைவி டதின் பதுகா செரி ரோஸ்மா மன்சூரும் வந்துள்ளார். இருவருமே ரஜினியின் தீவிர ரசிகர்கள்.

தங்கள் சென்னைப் பயணத்தின்போது ரஜினியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து ரஜினி வீட்டில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

Malaysian PM meets Rajinikanth at Chennai

இன்று காலை ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு நஜிப் ரசாக்கும் அவர் மனைவியும் வந்தனர். அவர்களை ரஜினிகாந்த் வரவேற்றார்.

ரஜினியின் படங்கள், அவருக்கு தாங்கள் எந்த அளவுக்கு ரசிகர்கள் என்பதையெல்லாம் ரஜினியிடம் கூறினர் மலேசிய பிரதமரும் அவர் மனைவியும்.

Malaysian PM meets Rajinikanth at Chennai

ரஜினியை மலேசியாவின் சுற்றுலா தூதராக வரும்படி இந்த சந்திப்பில் அழைப்பு விடுத்தனர். இதுகுறித்த எந்த முடிவையும் ரஜினிகாந்த் தெரிவிக்கவில்லை.

English summary
Malaysian PM Najib Razak was met with Superstar Rajinikanth at the later's Poes Garden house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil