»   »  ஆன்மீக அரசியல் தலைவருக்கு செமத்தியான வரவேற்பு... நட்சத்திர கலைவிழா கொண்டாட்டம்!

ஆன்மீக அரசியல் தலைவருக்கு செமத்தியான வரவேற்பு... நட்சத்திர கலைவிழா கொண்டாட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மலேசியாவில் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு-வீடியோ

சென்னை : ஆன்மீக அரசியல் அறிவிப்பைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மலேசியாவில் நடைபெறும் நட்சத்திரக் கலைவிழாவில் கலந்து கொள்கிறார்.

மலேசியாவில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு பிரமாண்ட நட்சத்திரக் கலைவிழா நடைபெறுகிறது.

இதில், கலந்து கொள்ள தன்னுடைய அரசியல் அறிவிப்பைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று இரவு 1 மணிக்கு மலேசியா சென்றார். அவருக்கு செமத்தியான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திரக் கலைவிழா

நட்சத்திரக் கலைவிழா

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நடைபெற இருக்கிறது. கலைநிகழ்ச்சிகளுக்கு முன்பாக நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகள் இன்று நடைபெற உள்ளன.

ரஜினிகாந்த் பங்கேற்பு

ரஜினிகாந்த் பங்கேற்பு

ரஜினிகாந்துடன் இணைந்து நூற்றுக்கும் அதிகமான நடிகர், நடிகைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் அங்கிருந்து நேரடியாக மலேசியாவுக்கு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

ரஜினிகாந்துக்கு வரவேற்பு

ரஜினிகாந்துக்கு வரவேற்பு

நேற்று இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் மலேசியா சென்றார் ரஜினிகாந்த். அங்கு ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதாவுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களுக்கு ஆரத்தி எடுத்து செமத்தியான வரவேற்பை அளித்தனர்.

இசை வெளியீடு

இசை வெளியீடு

இந்த விழாவில், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பிரபலங்களின் பேட்டி போன்றவை நடைபெற உள்ளது. விஜய் சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', விஷாலின் 'சண்டக்கோழி 2', 'இரும்புத்திரை' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் ஆகியவையும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டீசர்

டீசர்

மேலும், ரஜினிகாந்த், ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.ஓ படத்தின் டீசர் இந்த விழாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தொடர்பாக நிச்சயம் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது என்று இப்படத்தின் தயாரிப்பாளர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

English summary
Star arts festival starts in Malaysia today. Superstar Rajnikanth went to Malaysia following his political announcement to attend. He has been welcomed grandly. Many of the stars including Kamal Haasan are also present at this star festival.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X