»   »  மல்லிகா ஷெராவத்தின் காதலில் "பிரெஞ்சு" வாசம்!

மல்லிகா ஷெராவத்தின் காதலில் "பிரெஞ்சு" வாசம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சிக் கன்னியான மல்லிகா ஷெராவத் தொழிலதிபர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இவர் பிரெஞ்சுக்காரராம்.

2002 இல் வெளியான ஜீனா சிர்ஃப் மெரே லியே படம் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் மல்லிகா ஷெராவத். 39 வயதான மல்லிகா ஜாக்கி சானின் தி மித் படம் மூலம் ஹாலிவுட்டிலும் ஒரு முக்கிய ரோலில் நடித்தார்.

Mallika Sherawat confirms dating a Frenchman

மேலும் தசாவதாரம் படத்தில் வில்லியாகவும், ஒஸ்தி படத்தின் கலாசலா பாடல் மூலமாகவும் தமிழிலும் புகழ் பெற்றவர். அவர் தற்போது காதலில் விழுந்துள்ளார்.

பாரீஸ் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சிரில் ஆக்ஸென்ஃபேன்ஸுடன் நெருங்கி பழகி வருகிறார். மேலும் சென்ற மாதம் காதலர் தினத்தின் போது மல்லிகா ஷெராவத்தை ஒரு இளவரசி போல் உணரச்செய்து பரிசுகளால் அசத்தியுள்ளாராம் சிரில்.

அதில் விலையுயர்ந்த கார் ஒன்றும் அடக்கம். மேலும் இந்தச் செய்திக்கு மல்லிகா ஷெராவத்தும் தனது ட்விட்டர் பக்கத்தில், "காதல் வயப்படுவது உலகிலேயே மிகச் சிறந்த உணர்வு" என பதில் ட்வீட் செய்துள்ளார்.

நல்லாருங்கம்மா!

English summary
Mallika Sherawat has found love in Paris. The 39-year-old actor is dating a Paris-based real estate businessman Cyrille Auxenfans, and says that to be in love is the best feeling in the world.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil