»   »  இளம்வயது மோகன்லாலின் குரு மம்முட்டி.. 'ஒடியன்' ஷூட்டிங்!

இளம்வயது மோகன்லாலின் குரு மம்முட்டி.. 'ஒடியன்' ஷூட்டிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒடியன் படத்திற்காக இனையும் மோகன்லால், மம்முட்டி!- வீடியோ

திருவனந்தபுரம் : மலையாள நடிகர் மோகன்லால், தற்போது ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில், 'ஒடியன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இதில் ஒடியன் மாணிக்யன் என்கிற பிளாக் மேஜிக் மந்திரவாதியாக நடித்து வருகிறார் மோகன்லால்.

தற்போது இளம் வயது மோகன்லாலின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தப்படத்தில் இளம் வயது மோகன்லாலுக்கு மந்திர தந்திரங்களை கற்றுத்தரும் குருவாக மம்முட்டி நடிக்க இருக்கிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

Mammootty acts with mohanlal

தற்போது, அதிரப்பள்ளி அருவியில் நடைபெற்று வரும் 'ஒடியன்' பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு நடிகர் மம்முட்டி வந்து விசிட் அடித்து சென்றது அதை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் 'காயங்குளம் கொச்சுண்ணி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் மோகன்லால். ஒடியன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. படம் இந்த ஆண்டே ரிலீஸ் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Mohanlal is currently acting in 'Odiyan' directed by Sreekumar Menon. In this film, Mammootty is reported to be a teacher who teaches magic tricks for young Mohanlal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X