Don't Miss!
- News
எகிறும் எடப்பாடி.. பாஜகவை கழற்றிவிட்ட அதிமுக? ஈரோடு தேர்தல் பணிமனையில் மோடி படம், பாஜக கொடி மிஸ்ஸிங்
- Lifestyle
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
- Finance
Budget 2023: பட்ஜெட் எதிரொலி.. சென்செக்ஸ் 1100 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..!
- Automobiles
இதுகளோட வருகைக்குதான் ரொம்ப நாளா வெயிட் பண்றோம்! டூவீலர் லவ்வர்ஸ்க்கு இந்த மாசம் செம்ம தீனி காத்திட்டு இருக்கு
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
FIFA World Cup 2022: உலககோப்பை கால்பந்தாட்ட ஃபைனலை நேரடியாக கண்டு ரசிக்கும் மம்முக்கா, மோகன்லால்!
லூசெயில்: கத்தாரின் லூசெயில் அரங்கத்தில் நடைபெறும் பிரம்மாண்ட உலககோப்பை கால்பந்தாட்ட நிகழ்ச்சியை மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டி மற்றும் மோகன்லால் கண்டு ரசித்து வரும் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
ஒட்டுமொத்த உலக கால்பந்தாட்ட ரசிகர்களும் தற்போது மெஸ்ஸியின் மேட்ச்சை கண்டு குதூகலம் அடைந்து வருகின்றனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ், போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பலரும் மெஸ்ஸியின் ஜெர்ஸியுடன் வெளியிட்ட போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன.
என்னது
வீடியோ
சாங்ல
வாய்ஸ்
வருமா?
மஞ்சு
வாரியர்
போட்ட
புது
உருட்டு..
அப்போ
இது
எதுக்கு?

உலககோப்பை ஃபைனல்ஸ்
கிரிக்கெட் மற்றும் ஃபுட்பால் விளையாட்டுக்குத்தான் உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட்டை தாண்டியும் கால்பந்தாட்ட போட்டிக்கு ரசிகர்கள் ஏராளம். சினிமா பிரபலங்களும் அதிகளவில் விளையாட்டு போட்டிகளின் ரசிகர்களாக உள்ளனர். நேரடியாகவே மேட்ச்சை கண்டு ரசிக்கும் ஆர்வத்தை அதிகளவில் கொண்டுள்ளனர். கத்தாரில் நடைபெற்று வரும் கடைசி உலககோப்பை போட்டியில் அர்ஜெண்டினாவுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் இடையே போட்டி நடைபெற்று வருகிறது.

மெஸ்ஸி ஜெர்ஸியுடன் கீர்த்தி சுரேஷ்
இதில் அர்ஜெண்டினாவை சேர்ந்த நட்சத்திர ஆட்டக்காரரான மெஸ்ஸிக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். சச்சின் டெண்டுல்கரை போலவே இவரது ஜெர்ஸி நம்பரும் 10 என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் மெஸ்ஸியின் ஜெர்ஸி உடன் போட்டோ போட்டு உலககோப்பை போட்டியை தான் கண்டு ரசிக்கப் போவதாக தெரிவித்து இருந்தார்.

அட்டிக்குள்ள யாரு பாரு
அரபு அமீரக நாடுகளில் கோல்டன் விசா பெற்றுள்ள நடிகர் மம்மூட்டி கத்தாரில் நடைபெற்று வரும் இறுதிப்போட்டியை ஸ்டேடியத்திற்கே சென்று நேரடியாக கண்டு ரசிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை வெறியேற்றி உள்ளார். "Witnessing the biggest sporting spectacle.. What an atmosphere.. what a moment!! #fifaworldcup2022" என்றும் அவர் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

குவியும் லைக்ஸ்
71 வயதிலும் கால்பந்தாட்ட போட்டியை ஸ்டேஜுக்கே சென்று கண்டுகளிக்கும் நடிகர் மம்மூட்டியை பார்த்து பல பிரபலங்கள் கமெண்ட்ஸ் மற்றும் லைக்குகளை குவித்து வருகின்றனர். என்ஜாய் பண்ணுங்க மம்மூக்கா என்று கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மம்மூட்டி நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் வெளியாகின. அடுத்த ஆண்டு ஜோதிகாவுடன் இணைந்து காதல் படத்திலும் ரம்யா பாண்டியன் உடன் இணைந்து நண்பகல் நேரத்து மயக்கம் படத்திலும் நடித்து வருகிறார் மம்மூட்டி.

ஸ்டேடியத்தில் மோகன்லால்
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லாலும் இந்த இறுதிப்போட்டியை நேரடியாக கத்தார் ஸ்டேடியத்தில் கண்டு ரசிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மோகன்லால் மற்றும் மம்மூட்டி இறுதிப்போட்டியை பார்த்து ரசிப்பதை பார்த்த கேரள ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.