»   »  காலா படத்தில் மணியின் 'தளபதி மொமன்ட்'?

காலா படத்தில் மணியின் 'தளபதி மொமன்ட்'?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காலா படத்தில் மம்மூட்டி கவுரவத் தோற்றத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா. படப்பிடிப்பு கடந்த 28ம் தேதி துவங்கி மும்பையில் நடந்து வருகிறது. தாராவி மற்றும் அந்தேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.


ரஜினியை காண ரசிகர்கள் கூட்டம் முந்தியடிக்கிறது.


போலீஸ்

போலீஸ்

மும்பை போலீஸ் பாதுகாப்புடன் தான் படப்பிடிப்பை நடந்த வேண்டியுள்ளது. படக்குழுவால் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் உதவிக்கு வந்துள்ளனர்.


மம்மூட்டி

மம்மூட்டி

காலா படத்தில் மம்மூட்டி கவுரவத் தோற்றத்தில் வரக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதுவும் அவர் சட்ட மேதை அம்பேத்கராக நடிக்க உள்ளாராம்.


அம்பேத்கர்

அம்பேத்கர்

அம்பேத்கரின் வாழ்க்கை வராலாற்று படத்தில் அம்பேத்கராக நடித்திருந்தார் மம்மூட்டி. இந்த படத்திற்காக மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மணிரத்னம்

மணிரத்னம்

தளபதி படத்தை அடுத்து ரஜினிகாந்த், மம்மூட்டியை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் மணிரத்னம். இந்நிலையில் மம்மூட்டி காலா படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.


English summary
Speculations are doing rounds that actor Mammootty is all set to essay an important role in Rajinkanth's Kaala Karikalan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil