»   »  தல, தளபதி ரசிகர்கள் பகையை மறந்து ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்றால் நம்புவீர்களா?

தல, தளபதி ரசிகர்கள் பகையை மறந்து ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்றால் நம்புவீர்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தல, தளபதி ரசிகர்கள் பகையை மறந்து ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்றால் நம்புவீர்களா?. அது போன்ற ஒரு அதிசயம் கேரளாவில் நடந்துள்ளது.

தமிழ்நாட்டில் தல, தளபதி ஒற்றுமையாக இருந்தாலும் அவர்களின் ரசிகர்கள் மட்டும் ஒற்றுமையாகவே இருக்க மாட்டார்கள். சமூக வலைதளங்களில் சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

எந்த விஷயமாக இருந்தாலும் மோதிக் கொள்வார்கள்.

ட்விட்டர்

ட்விட்டர்

சில சமயங்களில் ட்விட்டரில் இவர்கள் சண்டை போட உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக்குகளுக்கு அர்த்தம் புரியாமல் வெளிநாட்டுக்காரர்கள் காண்டான சம்பவங்களும் நடந்தது உண்டு.

மோகன்லால்-மம்மூட்டி ரசிகர்கள்

மோகன்லால்-மம்மூட்டி ரசிகர்கள்

சரி விஷயத்திற்கு வருவோம். நம்ம தல, தளபதி ரசிகர்களை போன்று கேரளாவில் மோகன்லால், மம்மூட்டி ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள். இவர்கள் சண்டை ஓயவே ஓயாதா என்று அனைவரும் எதிர்பார்த்தது உண்டு.

கேஆர்கே

கேஆர்கே

நான் தான் நம்பர் ஒன் பாலிவுட் விமர்சகர் என்று சொல்லிக் கொள்ளும் கேஆர்கே மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலை சோட்டா பீம், ஜோக்கர் என்று விமர்சித்துவிட்டார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

மோகன்லாலை சோட்டா பீம் என்று விமர்சித்த கேஆர்கேவை லால் ஏட்டனின் ரசிகர்கள் கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் லால் ஏட்டனின் ரசிகர்களோடு ஒன்று சேர்ந்து மம்மூட்டி ரசிகர்களும் கேஆர்கேவை வசை பாடுகிறார்கள்.

அதிசயம்

அதிசயம்

எப்பொழுது பார்த்தாலும் மோதிக் கொள்ளும் மோகன்லால், மம்மூட்டி ரசிகர்கள் ஒன்று சேர்ந்துள்ளதை மலையாள ரசிகர்களால் நம்பவே முடியவில்லை. இது உலக அதிசயம் என்கிறார்கள். இப்பொழுது தலைப்பை மறுபடியும் படிக்கவும்.

English summary
Mammootty & Mohanlal could be termed as the real big stars of Mollywood, who have been ruling the industry jointly for the past 30 years. They enjoy a huge fan base in this state and like in any other industry, we have see fans of these actors taking a dig at each other. But, we just got to witness a pleasant sight when the fans of Mammootty and Mohanlal joined hands for a common cause. And it was the recent comments of self-proclaimed critic KRK that paved way for this rare union.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil