»   »  கையெடுத்துக் கும்பிட்ட மம்முட்டி... கூப்பிட்டு கையைப் பிடித்துக் குலுக்கிய நயன்தாரா!

கையெடுத்துக் கும்பிட்ட மம்முட்டி... கூப்பிட்டு கையைப் பிடித்துக் குலுக்கிய நயன்தாரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 63வது ஃபிலிம்பேர் விருதுகள் நிகழ்ச்சியில் நயன்தாராவுக்கும் மம்முட்டிக்கும் இடையில் நடந்த சம்பவதான் இப்போது சினிமா வட்டாரத்தில் ஹாட் டாபிக். இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என தெரியவில்லை,ஃபிலிம்பேர் விருது நிகழ்ச்சியின் போது நயன் தாராவை கண்டதும் முகத்தை திருப்பிக்கொண்டாராம் மம்முட்டி.

நயன்தாரவே போய் வாலண்டியராக கை கொடுத்தும் கும்பிடு போட்டராம் மம்முட்டி. ஆனால் நயன்தாரா, அதைப் பற்றி கவலைப்படாமல் மம்முட்டியின் கையை பிடித்து குலுக்கினார். இதுதான் இப்போது ஒரே பேச்சாக உள்ளது.

63வது ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா சில தினங்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் நடைபெற்றது.இந்த விழாவில் தென்னிந்திய திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

மம்முட்டி - நயன்தாரா

மம்முட்டி - நயன்தாரா

மலையாள மொழியில் சிறந்த நடிகருக்கான விருதை 'பதேமாரி' படத்திற்காக மம்முட்டி பெற்றார்.தமிழ் மொழியில் சிறந்த நடிகைக்கான விருதை 'நானும் ரவுடிதான்' படத்திற்காக நயன்தாரா பெற்றார்.

ஜோடி போட்ட ஜோடி

ஜோடி போட்ட ஜோடி

கடந்த ஆண்டு 'பாஸ்கர் தி ராஸ்கல்', இந்த வருடம் 'புதிய நியமம்' ஆகிய மலையாள படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
ஆனால் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என தெரியவில்லை.

கவனிக்காத மம்முட்டி

கவனிக்காத மம்முட்டி

அப்போது அந்த வழியே வந்த நயன்தாரா மம்முட்டிக்கு கைகொடுத்தார். ஆனால் நயன் தாராவை கண்டுகொள்ளாத மம்முட்டி நிகழ்ச்சியை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தார்.

கும்பிட்ட மம்முட்டி

கும்பிட்ட மம்முட்டி

சற்றே சுதாரித்த மம்முட்டி,நயன் தாராவுக்கு பதிலுக்கு கைகொடுக்காமல்,கை கூப்பி வணக்கம் மட்டும் தெரிவித்தார். ஆனால் நயன்தாரா பிடிவாதமாக மம்முட்டியின் கைகளை வலுக்கட்டாயமாக இழுத்து கைகுலுக்கிச் சென்றார்.

குலுக்கிய நயன்தாரா

மம்முட்டி வேடிக்கைக்காக அப்படி செய்தாரா?அல்லது நயன்தாராவை தவிர்க்க வேண்டும் என்பதற்காக அப்படி நடந்து கொண்டாரா? அவர்களுக்கிடையே அப்படி என்ன பிரச்சனை? என மலையாள திரையுலகம் முழுவதும் ஒரே பேச்சாக உள்ளது.

English summary
The photos from the event are making discussions among fans stating why Mammootty initially denied to acknowledge the presence of Nayanthara and shook hands later without even making any eye-contact.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil