நண்பகல் நேரத்து மயக்கம் ரிலீஸ் அப்டேட்... என்னய்யா மம்முட்டிய இப்படி மாத்தி வச்சிருக்கீங்க?

திருவனந்தபுரம்: மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடிப்பில் கடந்தாண்டு ரோர்சாக் திரைப்படம் வெளியானது.
ரோர்சாக் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்து நண்பகல் நேரத்தம் மயக்கம் வெளியாகவுள்ளது.
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் மம்முட்டியுடன் ரம்யா பாண்டியன், மறைந்த நடிகர் பூ ராமு ஆகியோர் நடித்துள்ளனர்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

 நண்பகல் நேரத்து மயக்கம்

நண்பகல் நேரத்து மயக்கம்

மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். 2022ல் பீஸ்மா பர்வம், புழு, ரோர்சாக் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். வெவ்வேறு ஜானரில் வெளியான இந்த மூன்று திரைப்படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து அவர் கிறிஸ்டோபர், நண்பகல் நேரத்து மயக்கம் படங்களில் நடித்துள்ளார். இதில் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ளார். டபுள் பேரல், அங்கமாலி டைரீஸ், ஈ.மா.யூ, ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற வித்தியாசமான படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் லிஜோ ஜோஸ்.

 அதகளமாக ரிலீஸான ட்ரெய்லர்

அதகளமாக ரிலீஸான ட்ரெய்லர்

இந்நிலையில், முதன்முறையாக மம்முட்டியும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியும் இணைந்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தமிழ்நாட்டின் பழனி பகுதியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. படத்தின் கதை முழுவதும் பழனி பகுதியில் பயணிப்பதாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் அதகளமான ட்ரெய்லர் ரிலீஸாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 வித்தியாசமான லுக்கில் மம்முட்டி

வித்தியாசமான லுக்கில் மம்முட்டி

இந்த ட்ரெய்லர் மம்முட்டி கட்டம் போட்ட அழுக்கு லுங்கி என வித்தியாசமான லுக்கில் வந்தது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. எப்போதும் ஸ்டைலிஷாக மாஸ் காட்டும் மம்முட்டி, அசல் கிராமத்து லுக்கில் வருவது செம்ம ரகளையாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். சினிமாட்டோகிராபி, மேக்கிங் என நண்பகல் நேரத்து மயக்கம் ட்ரெய்லர் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. முக்கியமாக மம்முட்டியின் லுக்கும் நடிப்பும் சிறப்பான சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

 ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரிலீஸ் தேதி அறிவிப்பு

நாளுக்கு நாள் நண்பகல் நேரத்து மயக்கம் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் பொங்கலுக்குப் பிறகு வரும் 19ம் தேதி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மம்முட்டி - லிஜோ ஜோஸ் பெல்லிசேரி கூட்டணியில் இந்தப் படம் புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X