Mohanlal: மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது.. மம்மூட்டியின் ரியாக்ஷன் தான் ஹைலைட்!
கொச்சி: மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கும் மோகன்லாலுக்கு மத்திய அரசு சார்பில், சினிமாவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சேவை செய்து வருவதற்காக தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மலையாள திரையுலகின் மற்றொரு சூப்பர் ஸ்டாரான மம்முட்டி இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் தனது எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அதாவது மம்முட்டி தனது எக்ஸ் பக்கத்தில் மோகன்லாலை டேக் செய்து, " சினிமாவில் சக நடிகராக மட்டும் இல்லாமல், ஒரு சகோதரனாக, நண்பனாக பல ஆண்டுகளாக சினிமாவை சுவாசமாக கொண்டுள்ள ஒரு கலைஞன். உங்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது என்பது இவர் நடிகர் என்பதற்காக மட்டும் அறிவிக்கப்படவில்லை, சினிமாவை உண்மையாகவே தனது மூச்சை போல கருதும் ஒரு கலைஞனுக்கு தான் அறிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு உண்மையில் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. அந்த கிரீடத்திற்கு லால் நீங்கள் உண்மையிலேயே தகுதியானவர்தான்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இவர் மட்டும் இல்லாமல் பல திரைப்பிரபலங்களும் மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ மோகன்லால் சிறந்து விளங்குவதற்கும், சகலகலா வல்லவன் என்பதற்கும் வாழும் எடுத்துக்காட்டு. பல தசாப்தங்களாக தனது சிறந்த படங்களுடன், மலையாள சினிமா, நாடகத்துறையில் முன்னணியில் இருப்பவர், கேரள கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். மலையாளம் மட்டும் இல்லாமல் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் அவர் அடிக்கோடிட்டிக் காட்டும் அளவுக்கான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பல்வேறு தளங்களில் அவரது சினிமா மற்றும் நாடகத் திறமை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. தாதாசாகேப் பால்கே விருது பெற்றதற்கு அவருக்கு வாழ்த்துக்கள். அவரது சாதனைகள் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்” என்று பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.
அதேபோல் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் பதிவில், “ தாதாசாகேப் பால்கே பற்றி எனக்கு அதிகம் தெரியாது; அவர் உருவாக்கிய முதல் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை, அதைப் பார்த்த நபரை ஒருவரையும் சந்தித்ததில்லை. ஆனால் நான் கண்டு அறிந்தவற்றிலிருந்து, ததாசேப் பால்கேவுக்கு மோகன்லால் தகுதியானவர். அவர் இந்த விருதுக்கு தகுதியானவர் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மோகன்லாலின் திரை வாழ்க்கை 1978-ஆம் ஆண்டு தொடங்கியது. இவர் நடிகராக 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, மலையாள சினிமாவின் சாதனையாளராக உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இருவர், ஜில்லா போன்ற படங்களைக் கூறலாம். இவருக்கு இதற்கு முன்னர் மாநில அரசும் மத்திய அரசும் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இவர் வாங்கிய விருதுகள். 4 முறை தேசிய திரைப்பட விருது (சிறந்த நடிகருக்கான). 9 முறை கேரள அரசின் சிறந்த நடிகர் விருது. 2019-இல் 'பத்ம பூஷன்' விருது பெற்றார். 2010-இல் 'ராஜிவ் காந்தி சிறந்த குடிமகன் விருது' பெற்றார்.


Click it and Unblock the Notifications











