»   »  மம்முட்டி 'சீரியஸ்' என காட்டுத் தீயாக பரவிய வதந்தி!

மம்முட்டி 'சீரியஸ்' என காட்டுத் தீயாக பரவிய வதந்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நடிகர் மம்மூட்டியின் நிலைமை கவலைக்கிடம் என்று சமூக வலைதளங்களில் தீயாக பரவிய செய்தியில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

மம்மூட்டி தான் நடித்த பத்தேமாரி படத்தின் 150வது நாள் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள துபாய் சென்றார். பின்னர் அங்கிருந்து கிளம்பிய அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மும்பை சென்றார்.

மும்பையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அந்தேரியில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பெங்களூருக்கு கிளம்பினார். பெங்களூரில் அவரது மகள் நடத்தும் மதர்ஹுட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

பி.பி.

பி.பி.

மம்மூட்டிக்கு பி.பி. அதிகம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு பி.பி.க்கான மருந்து மாத்திரைகள் அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் பெங்களூரில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு கிளம்பிச் சென்றார்.

கவலைக்கிடம்

கவலைக்கிடம்

மம்மூட்டிக்கு உடல் நலம் சரியில்லை என்ற செய்தி வெளியான வேகத்தில் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் தீயாக பரவியது.

நலம்

நலம்

சமூக வலைதளங்களில் கூறப்படுவது போன்று மம்மூட்டிக்கு ஒன்றும் இல்லை. அவர் நலமாக உள்ளார். ஓயாது பயணம் செய்தது, தூக்கமின்மை மற்றும் பி.பி.க்கான மருந்துகளை உட்கொள்ள மறந்தது ஆகியவற்றால் தான் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த படம்

அடுத்த படம்

உடல் நலம் சரியான பிறகு மம்மூட்டி நிதின் பனிக்கரின் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

English summary
Mammootty has been rumoured to be in a critical condition. Fake reports regarding Mammootty's bad health condition has been doing rounds in social media. But, the sources close to the megastar has confirmed that he is NOT in a critical condition.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil