»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சட்டமேதை அம்பேத்கர் வேடத்தில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன் என்று பிரபல மலையாள நடிகர் மம்முட்டிகூறியுள்ளார்.

நடிகர் மம்முட்டிக்கு சென்ற ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றதற்கான பாராட்டு விழா மும்பையில்நடந்தது. "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் என்ற படத்தில் நடித்தற்காக தேசிய விருதை மம்முட்டி பெற்றார்.

அதை பாராட்டி மும்பை சிவாஜி பூங்காவில் மக்கள் கலைக் கழகத்தின் சார்பில் மம்முட்டிக்குப் பாராட்டு விழாநடைபெற்றது. விழாவில் மம்முட்டி பேசுகையில், அம்பேத்கர் சட்டத்துறையின் தந்தையாகவும், சிறந்தசீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர். அந்த கதாபாத்திரத்தை நான் ஏற்று நடித்தது எனக்கு பெருமையான விஷயம்.

நான் இந்த பாத்திரத்தில் நடிக்க முடியுமா? என சந்தேகப்பட்டேன். இயக்குனர் ஜாபர் படேல் என் மேல் நம்பிக்கைகொண்டு என்னை நடிக்க வைத்து வெற்றி கண்டார் என கூறினார்.

இந்த விழாவில் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனைவரும் கவுரவிக்கப்பட்டனர்.

இந்தநிகழ்ச்சியில் பேசிய மகாராஷ்டிர மாநில முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் பேசுகையில், மம்முட்டி நடிப்புத்திறமையால் கலைக்கு மொழி ஒரு தடையில்லை என நிரூபித்துள்ளார் என பாராட்டினார்.

துணை முதல்வர் பூஜ்பால் கூறுகையில், அம்பேத்கார் படத்தில் சிறப்பாக நடித்து மம்மூட்டி வெற்றி பெற்றுள்ளார்.அடுத்தபடியாக அவர் சமூக சீர்திருத்தவாதியான மகாத்மா பூலேயின் கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்றார்.

யு.என்.ஐ.

Read more about: cinema, mamooty, mumbai
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil