»   »  போஜ்புரி பாட்டு பாடி காண்பிக்க அமிதாப் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்

போஜ்புரி பாட்டு பாடி காண்பிக்க அமிதாப் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரசிகர் ஒருவர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததால் கைது செய்யப்பட்டார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை காண கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி அளவில் அவரது வீட்டிற்கு முன்பு ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். அப்போது ஒரு ரசிகர் ஆர்வக்கோளாறில் சுவர் ஏறிக் குதித்து அமிதாபின் பங்களாவான ஜல்சாவுக்குள் நுழைந்துவிட்டார்.

Man breaks into Amitabh Bachchan’s bungalow

இதை பார்த்த அமிதாபின் பாதுகாவலர்கள் ஓடி வந்து அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த புல்லட் பன்வாரிலால் யாதத் என்பதும் அவர் புனேவில் வசித்து வருவதும் தெரிய வந்தது.

விசாரணையில் அவர் கூறுகையில்,

நான் அமிதாபின் தீவிர ரசிகன். நான் ஒரு பாடகன். அதனால் அமிதாபுக்காக ஒரு போஜ்புரி பாடலை பாடிக் காண்பிக்க சுவர் ஏறிக் குதித்தேன் என்றார்.

English summary
A fan from Bihar trespassed actor Amitabh Bachchan's bungalow to sing a Bhojpuri song for him.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil