இது உங்கள் வெற்றி..! குரூப் போட்டோவில் ஓரமாக அமர்ந்து போஸ் கொடுத்த விஜய்!
சென்னை: விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை வாழ்த்திய நடிகர் விஜய் குரூப் போட்டோவில் ஓரமாக இருப்பது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
Recommended Video
இது உங்களுக்கான வெற்றி என நிர்வாகிகளை முன்னிலைப்படுத்தி நடிகர் விஜய் ஒரு ஓரமாக அமர்ந்து தனது எளிமையான குணத்தை வெளிப்படுத்தி உள்ளார் என தளபதி ரசிகர்கள் ஹாஷ்டேக் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
மேலும், Time to Lead எனும் கோஷத்தையும் ஏகப்பட்ட ரசிகர்கள் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

முதல் பந்திலே சிக்ஸர்
விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்திருப்பது நடிகர் விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. அரசியல் கட்சியாக இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், சுயேட்சையாக நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊராட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பெரும் வெற்றியை பெற்றுள்ளனர்.

பெரிய வெற்றி
160 பேர் போட்டி போட்ட நிலையில், 129 பேர் வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. வெற்றி பெற்ற அனைத்து நிர்வாகிகளும் நடிகர் விஜய்யை சந்திக்க பனையூரில் உள்ள அவரது இல்லத்திற்கு வருகை தந்தனர். அவர்களை வாழ்த்திய விஜய் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு ஓரமாக
விழா நாயகனாக நடு நாயகமாக விஜய் அமர்ந்து போஸ் கொடுக்காமல் முதல் வரிசையில் கடைசி நபராக ஒரு ஓரமாக அதே பிளாஸ்டிக் சாரில் அமர்ந்து கொண்டு குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்த விஜய்யை குறிப்பிட்டு தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இது உங்கள் வெற்றி
நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை வாழ்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் விஜய் இது உங்களுடைய வெற்றி என்பதை அவர்களுக்கு உணர்த்தும் விதமாக ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

தல தோனி போல
கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக மாறிய நிலையில், தல தோனியும் இதே போலத்தான் மற்ற வீரர்களை முன்னிலைப்படுத்தி விட்டு கடைசியாக ஒரு ஓரத்தில் நின்று கொண்டு குரூப் போட்டோவிற்கு போஸ் கொடுப்பார். அதே போல நடிகர் விஜய்யும் போஸ் கொடுத்து இருப்பது அவரது எளிமையை காட்டுகிறது என பாராட்டி வருகின்றனர். பீஸ்ட் படப்பிடிப்பின் போதும் விஜய் மற்றும் தோனி சந்தித்த கொண்ட புகைப்படங்கள் வைரலாகின.

நல்லது செய்யணும்
பதவி கிடைத்ததும் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளக் கூடாது. தொடர்ந்து மக்களுக்கான சேவையை செய்யணும் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு அவர்களின் முக்கிய பிரச்சனைகளை உடனடியாக தீர்க்கும் முயற்சியில் இறங்க வேண்டும் என்றும் அறிவுரைகளை நடிகர் விஜய் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











