»   »  பாகுபலிக்கு போட்டியாக உருவாகும் பக்த கண்ணப்பா

பாகுபலிக்கு போட்டியாக உருவாகும் பக்த கண்ணப்பா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி படத்தை விட அதிக பொருட்செலவுடன் உலகத் தரத்திலான ஒரு படத்தை பிரபல தெலுங்கு நடிகரும், இயக்குனருமான மஞ்சு விஷ்ணு எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தப் படத்திற்கு பக்த கண்ணப்பா என்று பெயரிட்டிருக்கும் மஞ்சு விஷ்ணு கூடிய விரைவில் இதற்கான வேலைகளில் இறங்கவிருக்கிறார்.

ஹாலிவுட் தரத்தில் இந்தப் படத்தை எடுத்து அனைத்து மொழிகளிலும் வெளியிடவிருக்கின்றார் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Manchu Vishnu's Dream Project Bigger Than Baahubali?

பாகுபலி

120 கோடிகளுக்கும் அதிகமான பொருட்செலவில் உருவாகிய பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை சுமார் 600 கோடிகளை குவித்திருக்கிறது. பாகுபலியின் வெற்றியும் படத்திற்கு கிடைத்த மரியாதை கலந்த வரவேற்பும் இந்திய அளவில் பல்வேறு இயக்குனர்களையும் உசுப்பி விட்டிருக்கிறது.

புத்துயிர் பெறும்

ஆங்காங்கே தூங்கிக் கொண்டிருந்த வரலாற்றுக் கதைகளை பலரும் தட்டி எழுப்பி படமாக உருவாக்க முன்வந்திருக்கின்றனர். தமிழில் இயக்குநர் ஜனநாதன் தஞ்சைப் பெரிய கோயிலை வைத்து ஒரு படமெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதே போன்று ஹிந்தி மொழியில் பாஜிரோ மஸ்தானி என்ற வரலாற்றுப் படம் உருவாகி வருகிறது.

மஞ்சு விஷ்ணு

பிறமொழிகள் மட்டுமல்லாது தெலுங்கு மொழியிலும் பல இயக்குனர்கள் பாகுபலியை முறியடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான முயற்சியில் தெலுங்கு நடிகர் மஞ்சு விஷ்ணு தற்போது தீவிரமாக இறங்கியிருக்கிறார். பக்த கண்ணப்பா என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை எடுக்கவிருக்கும் மஞ்சு விஷ்ணு இதற்காக ஹாலிவுட்டிலிருந்து ஒரு கிராபிக்ஸ் குழுவினரை இறக்குமதி செய்திருக்கிறார்.

Manchu Vishnu's Dream Project Bigger Than Baahubali?

250 கோடியில்

இந்தப் படத்திற்கான முன்னோட்ட வேலைகள் தற்போது தொடங்கப்பட்டு இருக்கின்றன. 250 கோடி பொருட்செலவில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தை தெலுங்கின் பிரபல இயக்குநர் தனிகேல பரணி இயக்கலாம் என்று கூறுகின்றனர். தெலுங்கு மொழியில் நேரடியாக படத்தை உருவாக்கி அதனை பல்வேறு மொழிகளில் டப் செய்து வெளியிட மஞ்சு விஷ்ணு திட்டமிட்டு இருக்கிறாராம்.

பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட்

ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழில் உள்ள பெரிய நடிகர்களை நடிக்க வைக்கத் திட்டமிட்டு இருக்கும் விஷ்ணு தானும் ஒரு முக்கியமான வேடத்தில் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறுகின்றனர்.

பாகுபலியை மிஞ்சுமா பக்த கண்ணப்பா?

English summary
Tollywood Actor Manchu Vishnu Now Planning his Dream Project Bhakta kannappa. He wish to Become Bigger than Baahubali And Vishnu Playing a lead role in this movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil