»   »  சிக்கலில் மந்திரா

சிக்கலில் மந்திரா

Subscribe to Oneindia Tamil

சீக்கியர்களின் மத சின்னத்தை தனது உடலில் வரைந்து கொண்டுள்ள நடிகை மந்திரா பேடிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சிம்புவின் மன்மதன் படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடிவிட்டுப் போன மந்திரா தற்போது உலக கோப்பை கிரிக்கெட்டின் வர்ணனையாளராக சோனி டிவியில் வந்து போகிறார்.

இந்த நிகழ்ச்சியில் இவர் பேசுவது அதிகமில்லை. ஆனாலும் கிரிக்கெட் குறித்த நிபுணர்களின் ஷோவில் ஒரு ஷோ பொம்மை மாதிரி உட்கார்ந்து இருக்க வேண்டியது மட்டும் தான் இவரது வேலை.

கடந்த முறை தனது உடையை குறைத்து கிரிக்கெட்டை விட இந்த ஷோவை பிரபலமாக்கினார் மந்திரா. ஆனால், இந்த முறை இந்தியா தோற்றுப் போனதையடுத்து மந்திராவின் உடையிலும் மாற்றம். நிறைய உடை அணிந்து வருகிறார்.

இந் நிலையில் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சி விழா வழக்கம்போல் கவர்ச்சிகரமான உடையில் வந்து ஆட்டம் போட்டார். உடல் முழுவதும் மருதாணியில் கோலம் போட்டியிருந்தார். அதில் ஒன்று சீக்கியர்களின் மதச்சின்னம் போல் இருந்தது.

இதனால் சீக்கியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மந்திராவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் சீக்கிய அைமப்புகள், சில இடங்களில் அவரது உருவ பொம்மையையும் எரித்துள்ளன.

தங்கள் மத சின்னத்தை கேலி செய்த மந்திரா பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Please Wait while comments are loading...