வெங்கட் பிரபு சொன்ன மங்காத்தா 2 அப்டேட்...இதை நாங்க எதிர்பார்க்கவேயில்லையே
சென்னை : மாநாடு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவின் டாப் டைரக்டர்கள் பட்டியலில் இடம்பிடித்து விட்டார் டைரக்டர் வெங்கட் பிரபு. இவரது அடுத்த படம் என்ன, யார் அடுத்த ஹீரோ என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு டைரக்டர்களாக என்ட்ரி கொடுத்தவர் வெங்கட் பிரபு. அதற்கு முன் சிறிய ரோல்களில், ஹீரோவுக்கு ஃபிரண்டாக பல படங்களில் நடித்திருந்தாலும், டைரக்டர் அவதாரம் தான் இவரை பற்றி அனைவரையும் பேச வைத்தது.
மன்மத லீலை படத்தை தொடர்ந்து தெலுங்கில் நாக சைதன்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் வெங்கட் பிரபு. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டு, வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் வெங்கட் பிரபு.

மங்காத்தா 2 எப்போ
இதற்கிடையில் டைம்லூப் என்ற விஷயத்தை கையில் எடுத்து, மாநாடு படத்தை பிரம்மாண்ட வெற்றி பெற்ற வைத்த வெங்கட் பிரபுவிடம் மங்காத்தா 2 எப்போது எடுக்க போகிறீர்கள் என நீண்ட நாட்களாகவே பலரும் கேட்டு வருகின்றனர். அஜித்தின் 50வது படமான மங்காத்தா படத்தை வெங்கட் பிரபு தான் இயக்கி இருந்தார். இது பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது.

கங்கை அமரன் சொன்ன தகவல்
மங்காத்தா படத்தை அஜித்தை வைத்து எடுத்தது போல, மங்காத்தா 2 படத்தை அஜித் மற்றும் விஜய்யை ஒன்றிணைத்து எடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது. விரைவில் இந்த படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக கூட தகவல் பரவியது. இதற்கிடையில் வெங்கட் பிரபுவின் அப்பாவும் பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரனும் மங்காத்தா 2 நிச்சயம் வரும் என கூறி இருந்தார்.

15 ஆண்டுகளுக்கு பிறகு விருது
இந்த சமயத்தில் விருது வழங்கும் விழாவில் சமீபத்தில் கலந்து கொண்ட வெங்கட் பிரபுவிற்கு, மாநாடு படத்தில் சிறந்த திரைக்கதையை அமைத்ததற்காக விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் பேசிய வெங்கட் பிரபு, சென்னை 28 படத்திற்கு பிறகு கிட்டதட்ட 15 ஆண்டுகள் கழித்து சிறந்த திரைக்கதைக்காக எனக்கு விருது கிடைக்கிறது. டைம்லூப் என்பது தமிழ் சினிமாவிற்கே புதியது. அதை திரைக்கதையாக அமைத்து, திரையில் கொண்டு வந்துள்ளோம்.

கடவுளை வைத்து கதை
சையின்சாக சொல்லி இருந்தால் எனக்கே புரிந்திருக்காது. அதனால் சாமானி மக்களுக்கும் புரியும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக தான் நிறைய உழைத்தோம். சையின்ஸ் என்பதற்கு பதில் கடவுள் மேல் பாரத்தை போட்டு, கடவுளை மையமாக வைத்து டைம்லூப் கதையை கையில் எடுத்தோம். இந்த விருதினை என்னுடன் 4 ஆண்டுகள் கடுமையாக உழைத்த என்னுடைய அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு டெடிகேட் செய்கிறேன் என்றார்.

மங்காத்தா 2 எதிர்பார்க்கலாமா
அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர், அனைவரின் மனதிலும் ஓடும் ஒரே கேள்வி...மங்காத்தா 2 எதிர்பார்க்கலாமா என கேட்டார். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, நிஜமாகவே தெரியல. சத்தியமா எனக்கே தெரியல என்றார் அடக்கமாக. இது அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தாலும், மற்றொரு புறம் வெங்கட் பிரபு வேறு ஏதோ பிளானில் இருக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











