»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆய்த எழுத்து திருட்டு விசிடி குறித்து மணிரத்னம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான தனது ஆய்த எழுத்து படத்தின் திருட்டு விசிடி சரளமாக புழங்குவதால் தனதுபடத்தின் வசூல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கைஎடுக்குமாறும் கோ-ரி இயக்கு-நர் மணிரத்னம் சென்னை மா-நகர காவல்துறை ஆணைய-ரிடம் புகார்கொடுத்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் ஆய்த எழுத்து.இந்தியில் யுவா என்ற பெய-ரில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் திருட்டு விசிடி ஏ-ரா-ளமாகபுழங்குவதாகவும், இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படுவதாகவும் மணிரத்னத்திற்கு தகவல்கள்வந்தன.

இதையடுத்து ஆய்த எழுத்துப் படத்தின் திருட்டு விசிடியுடன் சென்னை மாநகர காவல்துறைஆணையர் அலுவலகத்திற்கு வந்த மணிரத்னம், ஆணையர் நடராஜை சந்தித்து இதுதொடர்பாகபுகார் கொடுத்தார்.

ஆய்த எழுத்து திருட்டு விசிடி விநியோகத்தை தடுத்து நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறுஅப்போது அவர் நடராஜை கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக கண்டிப்பாக நடவடிக்கைஎடுப்பதாக அப்போது ஆணையர் -நடராஜ் மணிரத்னத்திடம் உறுதியளித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil