twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பழிதீர்க்க காத்திருக்கும் பாண்டியர்கள்.. வெளியானது பொன்னியின் செல்வன் மிரட்டல் முதல் ப்ரமோ!

    |

    சென்னை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன்.

    இந்தப் படம் மணிரத்னத்திற்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் கனவுப்படமாக அமைந்துள்ளது.

    இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களை சிறப்பாக முடுக்கியுள்ளது படக்குழு.

    டைரக்டர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று கிடையாது...சோதனையில் உறுதியானது டைரக்டர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று கிடையாது...சோதனையில் உறுதியானது

    இயக்குநர் மணிரத்னம்

    இயக்குநர் மணிரத்னம்

    மணிரத்னம் எப்போதுமே தன்னுடைய படங்களில் சிறப்பான திரைக்கதை, கேரக்டர் தேர்வு மற்றும் காட்சி அமைப்புகளில் மிகவும் கவனமாக செயல்படுவார். அவரது பல படங்கள் மிகவும் சிறப்பான வகையில், சர்வதே தரத்தில் அமைந்தவை. ரசிகர்களின் கனவுகளுக்கு உயிர் கொடுத்தவை.

    கனவுக்கு உயிர்

    கனவுக்கு உயிர்

    அந்த இயக்குநர் தன்னுடைய கனவுக்கு உயிர் கொடுத்துள்ள படம்தான் பொன்னியின் செல்வன். அமரர் கல்கியின் இந்தப் படைப்பை இப்போது படித்தாலும் இந்த காலத்தை சேர்ந்த இளைஞர்களையும் இந்த எழுத்து நடை சிறப்பாக வசீகரிக்கும். அந்த வகையில் அவரது எழுத்துக்கு ஏராளமானோர் கட்டுண்டு உள்ளனர்.

    சிறப்பான திரைவடிவம்

    சிறப்பான திரைவடிவம்

    இந்த கதையை படமாக்கும் முயற்சி அத்தனை எளிதானதல்ல. ஓராயிரம் முறை யோசித்தே இந்தப் படத்திற்கு தற்போது திரை வடிவம் கொடுத்துள்ளார் மணிரத்னம். அவரது முந்தைய முயற்சிகள் பலிக்காமல் போனதற்கும் தற்போது சிறப்பான படமாக இந்தப் படம் உருவானதற்கும் கண்டிப்பாக தொடர்பு உண்டு.

    8 தினங்களில் ரிலீஸ்

    8 தினங்களில் ரிலீஸ்

    அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் இன்னும் 8 தினங்களில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், படத்தின் பாடல்களும் ஏஆர் ரஹ்மான் இசையில் அந்தக் காலத்திற்கே ரசிகர்களை அழைத்து செல்லும் வகையில் அமைந்துள்ளது.

    பழங்கால இசைக்கருவிகள்

    பழங்கால இசைக்கருவிகள்

    ஏஆர் ரஹ்மான், தன்னுடைய இசைக்கு எப்போதுமே சிறப்பான நியாயத்தை கொடுத்து வருபவர். அந்த வகையில் சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளை தன்னுடைய குழுவினரை வைத்து தேட வைத்து அதை படத்தின் இசைக்காக பயன்படுத்தியுள்ளார்.

    சிறப்பான பிரமோஷன்கள்

    சிறப்பான பிரமோஷன்கள்

    இதனிடையே படத்தின் பிரமோஷன் பணிகள் மிகவும் சிறப்பாக நடந்து வருகின்றன. ஒரு பக்கம் பேட்டிகளை கொடுத்துவரும் படக்குழுவினர், பிரமோஷனல் டூரிலும் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கேரளாவை தொடர்ந்து இன்றைய தினம் பெங்களூருவில் பிரமோஷனை செய்யவுள்ளனர். மீடியா முன்பு பேசவுள்ளனர்.

    சமூகவலைதளங்களிலும் சிறப்பு

    சமூகவலைதளங்களிலும் சிறப்பு

    இதனிடையே, சமூக வலைதளங்களையும் படக்குழு சிறப்பாக பயன்படுத்தி வருகிறது. படத்தின் அடுத்தடுத்த பாடல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவரும் படக்குழுவினர், தனித்தனியாக விக்ரம், ஜெயம் ரவி மற்றும் கார்த்தியின் கேரக்டர்களை முன்னிறுத்தும் போஸ்டர்களையும் வெளியிட்டது.

    பொன்னியின் செல்வன் முதல் ப்ரமோ

    பொன்னியின் செல்வன் முதல் ப்ரமோ

    படத்தின் நாயகர்களும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் தங்களது பெயரை மறைத்து, பொன்னியின் செல்வன் படத்தில் தாங்கள் ஏற்று நடித்த கேரக்டர்களை வைத்துள்ளதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    பாண்டியர்களின் அறிமுகம்

    பாண்டியர்களின் அறிமுகம்

    பாண்டிய அரசனின் கொலைக்கு பழிதீர்க்க சோழ நாட்டில் ஊடுருவிய விசுவாசிகளை இந்தப் ப்ரமோவின் காட்சிகள் எடுத்துக் காட்டுகின்றன. இதில் கிஷோர், ரியாஸ் கான் போன்றவர்களை பார்க்க முடிகிறது. இந்தப் ப்ரமோவிற்கு தன்னுடைய குரல் மூலம் உயிர் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

    English summary
    Director Mani ratnam's ponniyin selvan movie's first promo introduces Pandiyas released
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X