Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சோழ சாம்ராஜ்ஜியத்தை அழிபோம்..சபதமிடும் பாண்டியர்கள்.. வெளியானது பொன்னியின் செல்வன் ஸ்னீக் பீக்!
சென்னை : மணி ரத்னத்தின் நீண்ட நாள் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது.
சோழர்களின் வரலாற்றை பறை சாற்றும் பொன்னியின் செல்வன் நாவலாக இருக்கும் போதே கோடிக் கணக்கான ரசிகர்கள் கல்கியின் கை வண்ணத்தில் சொக்கிப்போனார்.
தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்காக அத்தனை ரசிகர்களும் தவம் இருக்கின்றனர். திரையரங்கிலும் முன்பதிவு டிக்கெட் விற்று தீர்ந்துள்ளது.
வாய்தா பட நடிகை தற்கொலை வழக்கு..காதலனிடம் 3 மணி நேரம் விசாரணை..ஒரு தலைக்காதலா?

பொன்னியன் செல்வன்
பொன்னியன் செல்வன் திரைப்படம் இந்தியாவின் பெருமை. இப்படியொரு படத்தை மணிரத்தினத்திடம் இருந்து யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வரலாற்று சிறப்பை கூறும் சரித்திரக்கதையை மணிரத்னம் அவர்களால் மட்டுமே எடுக்க முடியும் என்றும், இப்படம் நிச்சயமாக பிளாக்பஸ்டர் ஹிட்டடிக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் ரசிகர்கள் மணிரத்னத்தை பாராட்டி வருகின்றனர்.

ஸ்னீக் பீக் வீடியோ
இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் பாண்டிய அரசன் இருக்கும் இடமே பாண்டிய நாடு..இதே இந்த காடு தான் மதுரை, வீரபாண்டியனின் மகன் அமரபுஜரங்க பாண்டியன் அரியணையில் அமர்ந்து இருக்கிறார் என்று மிரட்டலாக உள்ளது வீடியோ.

ஆதித்த கரிகாலனை கொல்வோம்
கையில் கற்பூரத்தை ஏந்தியபடி ஆதித்த கரிகாலனை கொல்வோம், அருள்மொழி வர்மனை கொல்வோம் என் போர் வீரர்கள் ஓட்டுமொத்தமாக உறுதி ஏற்கின்றனர். ரவிதாசன் கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் அற்புதமாக நடித்து. மேலும் பாண்டியர்களின் கையில் கற்பூர நெருப்பின் கிரஃபிக்ஸ் வேலை மிகவும் சிறப்பாக உள்ளது. சில நிமிட காட்சியே மெய் சிலிர்க்க வைக்கிறது என்றால். திரையரங்குகளில் இன்னும் சிறப்பாக இருக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.

சோழ வம்சத்தை அழிப்பதாக சபதம்
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின்படி ஆதித்த கரிகாலன் பட்டத்து இளவரசனாகவும், துணிச்சலான போர் வீரனாக இருந்து சேவூர் போர்க்களத்தில் பாண்டியர்களை தோற்கடித்து, அவர்களின் மன்னன் வீர பாண்டியனின் தலையை துண்டித்தான். தங்கள் மன்னனின் மரணத்திற்குப் பழிவாங்க, பாண்டியக் கொலையாளிகள் சோழ சாம்ராஜ்யத்திற்குள் ஊடுருவி, சோழ வம்சத்தை அழிப்பதாக சபதம் செய்தனர். ரவிதாசன், சோமன் சம்பவன், தேவராளன், வரகுணன் ஆகியோர் மிகவும் பெயர் பெற்ற பாண்டியக் கொலையாளிகள்.

விற்றுத் தீர்ந்த டிக்கெட்
இந்த ஸ்னீக் பீக் வீடியோவைப் பார்த்த பிறகு, ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பிரமாண்டமான பின்னணி இசை திரையில் மிரட்டப்போகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என அனைத்து மொழிகளிலும் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது. படத்தைக்காண நான் நீ என்று போட்டிப்போட்டுக்கொண்டு ரசிகர்கள் டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றனர்.