»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மணி ரத்னத்தின் அறிமுகமான மாதவன் மீண்டும் தனது குருவின் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார்.

நடிக்கத் துவங்கிய மாதவன் இதுவரை மூன்று சூப்பர் ஹிட்டுகளைக் கொடுத்துள்ளார். முன்னணி கதாநாயகர்கள்வரிசையில் உள்ள மாதவன் மீண்டும் தனது குரு மணி ரத்னத்தின் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார்.

பாண்டிச்சேரியை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

டும் டும் டும் படத்திற்கு இசை அமைத்த கார்த்திக் ராஜாவே இந்தப் படத்திற்கும் இசையமைக்கவிருக்கிறார். டும்டும் டும் படத்தின் இசை மணிக்குப் பிடித்துப் போகவே அடுத்த படத்திற்கும் இசை ஞானியின் வாரிசுக்குவாய்ப்பளித்திருக்கிறார்.

சொல்ல முடியாது, மணி ரத்னம், இளையராஜா போல கார்த்திக் ராஜாவுடன் புதிய கூட்டணி உருவாகலாம்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ரவி கே.சந்திரன் இந்தப் படத்திற்குஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் படப்பிடிப்புத் துவங்கவுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil