»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

செக் மோசடி வழக்கில் நடிகர் மணிவண்ணனுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மணிவண்ணன் ஆசியன் கேபிடல் சர்வீஸஸ் என்ற நிறுவனத்திடம் கடந்த 2001ம் ஆண்டு பணம் வாங்கியிருந்தார்.அந்தப் பணத்தை வைத்து ஒரு படத்தைத் தயாரித்தார். ஆனால் படம் படுதோல்வி அடைந்ததால், பெரும்நஷ்டத்தை சந்தித்தார்.

இதையடுத்து ஆசியன் கேபிடல் நிறுவனத்திடம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தரவில்லை.

இந் நிலையில் ஆசியன் நிறுவனம் வற்புறுத்தவே ரூ. 5 லட்சத்திற்கு காசோலையைக் கொடுத்துள்ளார். ஆனால்,வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால், செக் திரும்பி வந்து விட்டது.

இதையடுத்து அந்த நிறுவனம் சைதாப்பேட்டை 23வது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில்மணிவண்ணனுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தீர்ப்பையடுத்து மணிவண்ணனின் வவக்கறிஞர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதை ஏற்றுக் கொண்டநீதிபதி மணிவண்ணனை ஜாமீனில் விடுதலை செய்தார்.

தண்டனையை எதிர்த்து ஒரு மாதத்திற்குள் மேல் முறையீடு செய்யவும் மணிக்கு அவகாசம் கொடுத்துள்ளார் நீதிபதி.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil